தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிப்பது குறித்து இன்று (9) மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக வி.சி.க தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், புதிய அரசு அமைப்பதில் நிலவும் இழுபறி இன்று ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் சில எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) முடிவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, த.வெ.க-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்த தனது அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளது. முன்னதாக, திருமாவளவன் நேற்று (8) இரவு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.
இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வி.சி.க-வும் அதே பாதையைப் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட த.வெ.க கூட்டணிக்குக் கீழ்க் கண்டவாறு ஆதரவு திரண்டுள்ளது:
த.வெ.க (TVK): 108 இடங்கள்
காங்கிரஸ்: 5 இடங்கள்
இந்திய கம்யூனிஸ்ட் (CPI): 2 இடங்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM): 2 இடங்கள்
வி.சி.க (VCK): 2 இடங்கள் (இன்று மாலை அறிவிப்பு வெளியானால்)
இந்த ஆதரவு உறுதி செய்யப்பட்டால், விஜய்யின் பலம் 119ஆக உயரும். இதன் மூலம் அவர் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோர முடியும்.
விஜய் தரப்பிலிருந்து ஏற்கனவே ஆதரவுக் கடிதங்கள் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மெஜாரிட்டி குறித்த தெளிவான ஆதாரம் இல்லாததால் ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. வி.சி.க-வின் கடிதமும் இன்று சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய தலைமையின் கீழ் தமிழகத்தில் ஆட்சி அமையுமா அல்லது இழுபறி நீடித்து மீண்டும் தேர்தல் வருமா என்ற பரபரப்பு இன்று மாலைக்குள் விலகிவிடும். விஜய்யும் திருமாவளவனும் இன்று நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM