ஹட்டன் பகுதியில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் போக்குவரத்துப் பொலிஸாராலும் நுவரெலிய மாவட்ட வாகன பரிசோதகராலும் இன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பாடசாலை மற்றும் ஆடைத்தொழிற்சாலை சேவையில் ஈடுப்பட்டு வரும் பஸ், வேன் ஆகிய வாகனங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டு குறைப்பாடுகளுடன் சேவையில் ஈடுப்பட்டு வந்த 9 வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில வாகனங்களில் கண்டறியப்பட்ட குறைப்பாடுகளை 14 நாட்களுக்குள் திருத்தியமைத்து ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரிடம் காட்டிய பின்னரே சேவையில் ஈடுபட முடியும் என இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையை மீறி சேவையில் ஈடுபடுத்தப்படும் வாகன உரிமையாளருக்கெதிராகவும், சாரதிக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.