சட்டவிரோத சிக்கரெட்டுக்கள், வல்லப்பட்டை மற்றும் கோடா வைத்திருந்த நான்கு சீன பிரஜைகளை கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொண்ட  சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட சந்தேக நபர்களிடமிருந்து 16,200 சட்டவிரோத சிகரெட்டுகள், 830 கிராம் வல்லப்பட்டை மற்றும் 110 லீட்டர் கோடா ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.