(நெவில் அன்தனி)
மிர்பூர் ஷியர் பங்ளா தேசிய விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (08) ஆரம்பமான பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் பலமான நிலையில் இருக்கிறது.
![]()
இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு மற்றும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதலாவது போட்டியான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி குவித்த சதமும் மொமினுள் ஹக் பெற்ற அரைச் சதமும் பங்களாதேஷ் பலமான நிலையை அடைய உதவின.
ஆரம்ப வீரர்களான மஹ்முதுல் ஹசன் ஜோய் (5), ஷத்மான் இஸ்லாம் (13) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (31 - 2 விக்.)

இதனைத் தொடர்ந்து மொமினுள் ஹக், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 170 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர்.
நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 12 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 101 ஓட்டங்களைப் பெற்றதுடன் மொமினுள் ஹக் 10 பவுண்டறிகளுடன் 91 ஓட்டங்களைப் பெற்றார்.

மொமினுள் ஹக் 4ஆவது விக்கெட்டில் முஷ்பிக்குர் ரஹிமுடன் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் முஷ்பிக்குர் ரஹிம் 48 ஓட்டங்களுடனும் லிட்டன் தாஸ் 8 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி, மொஹம்மத் அபாஸ், ஹசன் அலி, நோமன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப் போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்துல்லா பஸால், அஸான் ஆவாய்ஸ் ஆகிய இருவரும் அறிமுகம வீரர்களாக இடம்பெறுகின்றனர்.
மேலும் சரியாக நான்கு மாத இடைவெளியின் பின்னர் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.
டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் பாகிஸ்தான் 12 புள்ளிகளுடன் 50 சதவீத புள்ளிகளைப் பெற்று 5ஆம் இடத்திலும் பங்களாதேஷ் 4 புள்ளிகளுடன் 16.67 சதவீத புள்ளிகளைப் பெற்று 8ஆம் இடத்திலும் இருக்கின்றன.
அவுஸ்திரேலியா (84 புள்ளிகள், 87.50 சதவீத புள்ளிகள்), நியூஸிலாந்து (28 புள்ளிகள், 77.78 சதவீத புள்ளிகள்), நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா (36 புள்ளிகள், 75.00 சதவீத புள்ளிகள்), இலங்கை (16 புள்ளிகள், 66.67 சதவீத புள்ளிகள்) ஆகியன முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன.
இந்தியா 52 புள்ளிகளுடன் 48.15 சதவீத புள்ளிகளைப் பெற்று 6ஆம் இடத்திலும் இங்கிலாந்து (38 புள்ளிகள், 31.67 சதவீத புள்ளிகள்) 7ஆம் இடத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் (4 புள்ளிகள், 4.17 புள்ளிகள்) 9ஆம் இடத்திலும் இருக்கின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM