ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­பட்ட இலங்­கையின் இரு கழகங்­களைச் சேர்ந்த அணித் தலை­வர்­க­ளுக்கு இரண்டு வருட போட்டித் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு அந்த அணி­களின் பயிற்­சி­யா­ளர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கும் எவ்­வித கிரிக்­கெட்­டு­டனும் தொடர்பு கொள்ள முடி­யாத தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம் நடை­பெற்ற உள்ளூர் போட்­டி­களின் போது பாண­துறை சி.சி. மற்றும் களுத்­துறை பி.சி.சி. அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற போட்­டியில் இந்த ஆட்ட நிர்­ணய சூதாட்டம் நடை­பெற்றுள்­ளது.

கடந்த சில மாதங்­க­ளாக இது­கு­றித்த விசா­ர­ணையை நடத்தி வந்த இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் கடந்த சனிக்­கி­ழமை தமது முடிவை அறி­வித்­துள்­ளது.

அதன்­படி குறிப்­பிட்ட இரண்டு கழ­கங்­களின் தலை­வர்­க­ளான சாமர சில்வா மற்றும் மனோஜ் தேஷப்­பி­ரிய ஆகி­யோ­ருக்கு எவ்­வித கிரிக்கெட் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட முடி­யாத இரண்டு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்­தோடு இரண்டு அணி­க­ளுக்கும் தலா 5 இலட்சம் ரூபா அப­ரா­தமும், ஏனைய அணி வீரர்­க­ளுக்கு ஒரு வருட தடையும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.