(க.கிஷாந்தன்)

 லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் ரட்ணகிரி  பகுதியில்  இன்று காலை 10 தொழிலாளர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

 கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதே குளவி தாக்கியுள்ளதோடு இதில் 9 பெண்களும் 1 ஆணும் அடங்குகின்றனர்.

  பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு  9 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.  ஒருவர் மாத்திரம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.