"ஒரு தலை­மு­றை­யையே இலங்கைக் கிரிக்கெட் இழந்­து­விட்­டது" ஆதங்­கத்­துடன் லசித் மலிங்க

Published By: Robert

18 Sep, 2017 | 11:07 AM
image

ஒரு தலை­மு­றை­யையே இலங்கைக் கிரிக்கெட் இழந்­து­விட்­டது என்று லசித் மலிங்க ஆதங்­கத்­துடன் தெரி­வித்­துள்ளார். அதேபோல் மக்­களின் விருப்­பத்­திற்கு புதிய இளம் வீரர்­களை அணியில் சேர்த்து, சேர்­த்த­வர்கள் நல்ல பெயரைப் பெற்­றுக்­கொண்­டார்கள். அணி வீழ்ச்­சியைக் கண்­டு­விட்­டது என்றும் அவர் தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

Image result for லசித் மலிங்க

இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக் கால­மாக கண்­டு­வரும் தொடர் தோல்­வி­களால் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­வ­ரு­கின்­றது. அதேபோல் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரும் கண்­டு­கொள்­ளாமல் இருக்­கிறார் என்றும் விமர்­ச­னங்கள் எழுந்­தன. 

இந்­நி­லையில் கிரிக்­கெட்டை மீட்­டெ­டுப்­ப­தற்­கான விசேட செய­லர்வை நடத்த விளை­யாட்­டுத்­துறை அமைச்சு முடி­வு­செய்­தது.

அதன்­படி விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தலை­மையில் கிரிக்கெட் மீட்­டெக்கும் விசேட செயற்றிட்ட சம்­மே­ளனம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு வோர்ட்டஸ் எட்ஜ் ஹோட்­டலில் நடை­பெற்­றது.

இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், இலங்கைக் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஒரு தலை­மு­றை­யையே நீக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அதில் சிக்­கக்­கொண்­ட­வர்­கள்தான் ஜெஹான் முபாரக், திலின கண்­டம்பே, மலிந்த வர்­ண­புர, சாமர சில்வா, கௌஷால் வீர­ரத்ன போன்ற வீரர்கள். இவர்கள் மட்­டு­மல்ல, இன்னும் பலர் இருக்­கி­றார்கள்.

இப்­ப­டி­யொரு தலை­முறை தேசிய அணிக்கு வரு­வ­தற்கு கழக மட்­டத்தில் 8 அல்­லது 9 வரு­டங்கள் விளை­யா­டி­ய­வர்கள்.

அப்­படி பல போராட்­டங்­க­ளுக்குப் பிறகு தேசிய அணிக்கு வந்து சர்­வ­தேச அளவில் 2 வரு­டங்கள் விளை­யாடிக் கொண்­டி­ருக்­கும்­போது ஒரு சில கார­ணங்­களால் அவர்­களை நீக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அந்த நேரத்தில் நாம் சரி­யான நடை­மு­றையை கையா­ள­வில்லை. அவர்­களின் திற­மை­கள் மங்­கி­யதால் நீக்­கப்­பட்­டார்கள் என்றால், அவர்­களின் திறமை ஏன் குறைந்­தது என்­பதை ஆராய்ந்து அதற்­கேற்ப அவர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளித்து அவர்­களை திற­மை­யான வீரர்­க­ளாக உரு­வாக்­கி­யி­ருக்­க­வேண்டும்.

அவர்­களின் அனு­ப­வத்­தோடு பயிற்­சி­யா­ளர்கள் அதை இலகுவாக செய்திருக்கலாம். ஆனால் அதை யாரும் செய்யவில்லை.

வெளியிலிருந்து வரும் கருத்துக்களுக்கும், மக்களின் கருத்துக்களுக்கும் செவிசாய்த்து இளையவர்களை அணிக்கு கொண்டுவந்து விளையாடவிட்டு தாங்கள் பிரகாசித்தார்களே தவிர இந்த வீரர்களை வளர்த்தெடுத்து அணியை பலப்படுத்த நினைக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46