கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கும் மஹாநாம கல்லூரிக்கும் இடையிலான 20ஆவது வருடாந்த பொன் அணிகள் கிரிக்கட் சமர் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று முதல் 3 தினங்களுக்கு நடைபெறவுள்ளது.
2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத் தொடர் இரண்டு நாள் தொடராக நடாத்தப்பட்டு வந்தது. இந்த வருடத்திலிருந்து 3 நாள் போட்டியாக நடத்தப்படவுள்ளது.
இத்தொடரில் டி. எஸ். சேனநாயக்க கல்லூரி தனது முதல் வெற்றியை 2014 ஆம் ஆண்டு பினுர பெர்னாண்டோவின் தலைமையில் பெற்றது. அதன் பின்னர் 2025 வரை முடிவுகள் கிட்டவில்லை.
பொன் அணிகள் சமர் தொடரின் முதல் இரட்டைச் சதத்தை டி. எஸ். சேனநாயக்க கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவர் கவிரு கவிரு சென்ஹாஸ் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். அதேவேளை, மஹாநாம கல்லூரியைச் சேர்ந்த மாலித் மதுரங்க, இத்தொடரில் 1000 ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மஹாநாம கல்லூரி வீரர்களான துல்னித் சிகேரா மற்றும் சமிகா ஹீனட்டிகல ஆகியோர் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றவர்களாவர்.
இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் அரவிந்த டி சில்வா சவால் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மஹாநாம கல்லூரி 12 - 4 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.
கடந்த வருடம் நடைபெற்ற அங்குரார்ப்பண கே.என்.பி. டி சில்வா நினைவு கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியில் மஹாநாம கல்லூரி வெற்றிபெற்றது.
டி. எஸ். சேனநாயக்க கல்லூரி அணிக்கு ரந்திஷ பண்டாரநாயக்கவும், மஹாநாம கல்லூரி அணிக்கு துல்னித் சிகேராவும் தலைவர்களாக விளையாடுகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM