மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்; DLS முறைமையில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றி, நடப்பு சம்பியன் RCBக்கு நான்காவது தோல்வி

08 May, 2026 | 01:06 PM
image

(நெவில் அன்தனி)

லக்னோவ் எக்கானா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (07) இரவு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 9 ஓட்டங்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது.

நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த வருடம் அடைந்த நான்காவது தோல்வி இதுவாகும். இப் போட்டியில் வெற்றிபெறத் தவறியதால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 3ஆம் இடத்தில் இருக்கிறது.

மழையினால் இரண்டு தடவைகள் தடைப்பட்ட இந்தப் போட்டியில் அவுஸ்திரெலியாவின் சகலதுறை வீரர் மிச்செல் மார்ஷ் குவித்த அபார சதம் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸின் வெற்றிக்கு வித்திட்டது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 19 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது.

லக்னோவ் துடுப்பெடுத்தாடியபோது 9 ஓவர்கள் நிறைவிலும் 14 ஓவர்கள் நிறைவிலும் சிறு மழை பெய்ததால் ஆட்டம் 19 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

மிச்செல் மார்ஷ், அர்ஷின் குல்கர்னி (17) ஆகிய இருவரும் 56 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்த மிச்செல் மார்ஷ் 2ஆவது விக்கெட்டில் நிக்கலஸ் பூரணுடன் மேலும் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மிச்செல் மார்ஷ் 56 பந்துகளில் 9 பவுண்டறிகள்,  9 சிக்ஸ்களுடன் 111 ஓட்டங்களைக் குவித்தார்.

நிக்கலஸ் பூரண் 38 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரிஷாப் பான்ட் ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 19 ஓவர்களில் 213 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதல் 2 ஓவர்களுக்குள் ஜேக்கப் பெத்தல் (4), விராத் கோஹ்லி (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்ததால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் தேவ்டத் படிக்கல் (34), அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் (61) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில்  95 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

ஆனால் மூன்று விக்கெட்கள் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்ததால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீண்டும் சிக்கலை எதிர்கொண்டது.

டிம் டேவிட் (40), க்ருணல் பாண்டியா (28 ஆ.இ.), ரொமாரியோ ஷெப்பர்ட் (23 ஆ.இ.) ஆகியோர் தமது அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முயற்சித்த போதிலும் அவர்களின் முயற்சிகள் கைகூடாமில் போயின.

பந்துவீச்சில் ப்றின்ஸ் யாதவ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷாபாஸ் அஹ்மத் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மிச்செல் மார்ஷ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு...

2026-06-08 22:05:31
news-image

மே. தீவுகள் பயிற்சியக அணிக்கு எதிரான...

2026-06-08 20:26:35
news-image

அறிமுக வீரர் சுதார் அபார பந்துவீச்சு;...

2026-06-08 20:08:37
news-image

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர்...

2026-06-08 15:12:04
news-image

லண்டன் வோட்டர்லூ பாலத்தில் மகளிர் ரி20...

2026-06-08 13:38:36
news-image

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி...

2026-06-06 21:29:49
news-image

மேற்கிந்திய மண்ணில் 23 வருடங்களின் பின்னர் ...

2026-06-06 21:28:16
news-image

நியூ சண்டிகாரில் நடைபெறும் அங்குரார்ப்பண டெஸ்டில்...

2026-06-06 21:23:17
news-image

தே.வி.விழா நகர்வல ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில்...

2026-06-06 17:29:28
news-image

முன்னாள் தேசிய வீரர் மற்றும் பயிற்றுநர்...

2026-06-05 20:29:40
news-image

இளம் புயல் சூரியவன்ஷி அடங்கிய இந்திய...

2026-06-05 17:37:00
news-image

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார...

2026-06-05 17:37:00