இலங்கையின் “ City of Dreams " இல் உள்ள Cinnamon Life, இந்த மே மாதத்தில் புகழ்வாய்ந்த ஒரு சமையல் கலை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய சமையல் கலை நிபுணர் சுரேஷ் பிள்ளை, 2026 மே 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும் பிரத்யேக சமையல் கலை விருந்தினை வழங்கவுள்ளார்.
சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேலான சமையற்கலை அனுபவம் கொண்ட இந்திய சமையல் கலை நிபுணர் சுரேஷ் பிள்ளை, கேரளாவின் பாரம்பரிய உணவு முறைகளை உலகிற்கு கொண்டு செல்வதில் முன்னோடியாகத் திகழ்கிறார். லண்டனில் உள்ள மிச்செலின் நட்சத்திர உணவகங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்ட இவர், தற்போது சர்வதேச விருந்தோம்பல் நிறுவனங்களின் ஸ்தாபகராகவும் தலைமைப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.
மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு , உலகத்தரம் வாய்ந்த சமையல் சங்கமங்களுக்கான முதன்மை இடமாக “ City of Dreams” உள்ள இல் உள்ள Cinnamon Life ஐ நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேரள உணவுகளை வரையறுக்கும் தனித்துவமான சுவைகள், பாரம்பரியம் மற்றும் நறுமணப் பொருட்களின் செழுமை ஆகியவற்றை இலங்கையின் மூலப்பொருட்களுடனும் சமையல் நேர்த்தியுடனும் தடையின்றி ஒருங்கிணைப்பதே இந்த நிகழ்வின் தனித்தவமாகும் .
குறித்த இந்த நிகழ்வு
காடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தேன் மற்றும் புதிய புதினா கலந்த குளிர்ந்த இளநீர் பானமான 'தேனே இளநீர்' எனும் புத்துணர்ச்சியூட்டும் வரவேற்பு பானத்துடன் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து கேரளாவின் 'டொடி ஷொப்' சுவைகளின் நவீன வடிவமான மரவள்ளிக் கிழங்கு மற்றும் காந்தாரி மிளகாய் ஸ்கீவர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விருந்தினர்கள் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பலதரப்பட்ட உணவு வகைகளைச் சுவைக்கும் வாய்ப்பினைப் வழங்கவுள்ளனர். இதில்:குளிர்ந்த தேங்காய்ப்பால் மொய்லி சிறிய நெய் தோசை மற்றும் தக்காளி சட்னியுடன் கூடிய கொங்குநாடு தாமரைத்தண்டு மசாலா.தேங்காய் பிரதானமாகச் சேர்க்கப்பட்ட கடல் உணவுகள் மற்றும் சைவ உணவுகள்.பிராந்திய மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் செறிந்த கட்லெட்டுகள் ஆகிய உணவுகள் பரிமாருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடு இந்நிகழ்வுக்கு மெருகேற்றும் வகையில் இந்திய சமையல் கலை நிபுணர் சுரேஷ் பிள்ளையின் 'கேரளாவின் கடலோரச் சுவைகளின் தலைசிறந்த உணவான பிஷ் நிர்வாணா' முட்டை ஆப்பம் மற்றும் தேங்காய் சம்பல் பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது.
இது கேரளாவின் காயல் பாரம்பரியத்திற்கும் இலங்கையின் கடலோரச் சமையல் மரபுக்கும் இடையில் ஒரு அற்புதமான சுவைப் பாலத்தை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பாரம்பரிய மலபார் நூல் பரோட்டா, உள்ளி தீயல் மற்றும் கோட்டுக்கொல சம்பல் உள்ளிட்ட துணைக்கறிகளும் பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளாவின் மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட 'உண்ணியப்பம் தேன் முட்டை பலூடா' மற்றும் கித்துள் வெல்லம் சேர்த்த 'கருப்பு ஏலக்காய் சாக்லேட் பிரவுனி' ஆகியவை இந்தச் சுவைப் பயணத்தின் இனிப்பான நிறைவாக அமையும். அதனைத் தொடர்ந்து, மசாலா கலந்த மலபார் பிளாக் டீ மற்றும் கையால் செய்யப்பட்ட பெட்டிட் ஃபோர்ஸ் இனிப்புகள் பரிமாறப்படும்.
இந்நிகழ்வு கேரளாவின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் அதேவேளையில் இலங்கையின் துடிப்பான சுவைகளைத் தழுவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது,” என சமையல் கலை நிபுணர் சுரேஷ் பிள்ளைதெரிவித்தார்.
உலகத்தரம் வாய்ந்த இந்த உணவுத் திருவிழாவானது '' Powerhouse Ventures Pvt Ltd) ”நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு +94 77 962 8132 எனும் இலக்கத்திற்கு அழைக்கலாம் .
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM