இன்று முதல் தேசிய விபத்து தவிர்ப்பு வாரம் பிரகடனம்

Published By: Robert

18 Sep, 2017 | 09:43 AM
image

நாட­ளா­விய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. இன்று முதல் 22 வரை தேசிய விபத்து தடுப்பு வார நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளன. இதற்­கான விரி­வான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இன்று முதல் வீதி விபத்­துக்­களை தடுப்­ப­தற்­கான வேலைத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இரண்டாம் நாளான  19ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை வேலைத் தளங்­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

வீடு­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் வாரத்தின் மூன்றாம் நாளான 20ம் திகதி புதன்­கி­ழமை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. வியா­ழக்­கி­ழமை 21ம் திகதி நான்காம் நாள் முன்­பள்ளிப் பாட­சா­லை­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைக் தடுப்­ப­தற்­கான பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இறுதி நாள் 22ம் திகதி பாட­சாலை விபத்­துக்­களைக் தடுப்­ப­தற்­கான வேலைத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இலங்­கையில் மணித்­தி­யா­லத்­திற்கு ஒருவர் என்ற ரீதியில், நாளொன்­றுக்கு 27 பேர் விபத்­துக்­களில் இறப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நாட்டில் பல்­வேறு விபத்­துக்­களின் மூலம் வரு­ட­மொன்­றிற்கு மொத்தம் 10 ஆயிரம் பேர் உயி­ரி­ழப்­ப­தாக சுகா­தாரம், போஷாக்கு, சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் டாக்டர் திலக் சிறி­வர்த்­தன தெரி­வித்­துள்ளார்.

மணித்தியாலத்துக்கு  480 பேர் என்ற விகிதத்தில் நாளொன்றுக்கு 11 ஆயிரம் பேர் விபத்துக்களில் சிக்கி சிகிச்சை பெறுவதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58