இங்கிரிய - ஹந்தபான்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

கூரிய ஆயுதம் மற்றும் பொல்லால் தாக்கப்பட்ட பாதுக்கை - உடுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே பலியாகியுள்ளார். 

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய நபர்கள் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவரைக் கைதுசெய்ய இங்கிரிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.