கடன் தீர்வதற்கான பிரத்யேக குறிப்பு..!

Published By: Digital Desk 2

07 May, 2026 | 02:47 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் நாளாந்த வாழ்வை எதிர்கொள்வதற்கும் கடன் வாங்கும் சூழ்நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது. வாங்கிய கடனுக்கான வட்டியும் தொடர்ந்து சுமையாகி வருகிறது. கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தாலும்... அதற்காக கடுமையாக உழைத்தாலும்... அவர்களால் வாங்கிய கடனுக்கான வட்டி தொகையை மட்டுமே திரும்ப செலுத்த இயலுகிறது.

இத்தகைய சூழலில் கடன் சார்ந்த நெருக்கடி எப்போது தீரும்? என்ற எண்ணம்தான் அனைவருக்கும் முதலில் தோன்றுகிறது. இந்தத் தருணத்தில் இவர்களிடம் வாழ்க்கையின் லட்சியம் என்ன? என்று கேட்டால்... கடன்களை எல்லாம் முழுமையாக செலுத்திவிட்டு கடனே இல்லாத நிலையை ஏற்படுத்துவதுதான் வாழ்வின் லட்சியம் என உறுதிப்பட தெரிவிப்பார்கள்.

ஆனால் அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு புலப்படுவதில்லை. இந்நிலையில் கடனை வட்டியுடன் திரும்ப செலுத்துவதற்கான சூழல் உருவாவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்பை வழங்கி உள்ளனர்.

இதற்கு தேவையான பொருட்கள்: அவல் - நாட்டு சர்க்கரை.

உன்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் கிருஷ்ணன் ஆலயத்திற்கு சென்று அவல் மற்றும் நாட்டு சர்க்கரையின் கலவையை நிவேதனமாக படைத்து கிருஷ்ண பகவானை கடனில் இருந்து விடுபட அருள் புரிய வேண்டும் என மனதார பிரார்த்திக்க வேண்டும்.

இதனை உன்னுடைய பிறந்த கிழமைகளில் இருந்து தொடங்கி தொடர்ந்து செய்து வர.. விரைவில் கடன்களை வட்டியுடன் திரும்ப செலுத்துவதற்கான சூழலும், புதிய வாய்ப்புகளும் உருவாகி.. கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள் என ஆன்மீக முன்னோர்கள் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.

தொகுப்பு: சுபயோகதாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொடர் தோல்வியை மாற்றியமைப்பதற்கான எளிய வழிமுறை!

2026-06-16 17:04:51
news-image

கண் திருஷ்டியை நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2026-06-15 17:12:49
news-image

புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-12 14:13:00
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..!?

2026-06-11 17:16:42
news-image

பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும்..?

2026-06-10 16:42:14
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-06-09 18:14:07
news-image

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான பிரத்யேக...

2026-06-08 17:05:52
news-image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

2026-06-05 16:03:16
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-06-04 16:58:05
news-image

மனதின் அச்சம் நீங்குவதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-03 15:14:02
news-image

வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

2026-06-02 17:58:16
news-image

தன வரவை நாளாந்தம் அதிகரித்துக் கொள்வதற்கான...

2026-06-01 14:30:17