மதச்சார்பற்ற நாட்டை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா? : சந்தேகம் வெளியிடும் நாமல் ராஜபக்ஷ

Published By: Digital Desk 1

07 May, 2026 | 02:18 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் மத விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழித்து ஒரு மதச்சார்பற்ற நாட்டை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகால வளர்ச்சியை இலக்காகக் கொண்ட புதிய அரசியல் பயணத்தின் அவசியத்தை வலியுறுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பியகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று நாட்டில் மக்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதிக்கு பதிலாக வேறு எவரோ முக்கிய தீர்மானங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அசைக்க முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து, எல்லையற்ற எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் விதைத்துத்தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஒரு மாற்றம் வேண்டும் என்று இந்த நாட்டு மக்கள் பலமுறை இவர்களை நம்பினார்கள். ஆனால் இறுதியில் நடந்தது என்ன?

பிற கட்சியினரின் பதாகைகளை கிழித்துஇ வன்முறையில் ஈடுபட்டுஇ ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்இ இன்று தாங்கள் தேர்தல் மேடைகளில் கொடுத்த ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத ஒரு அரசாங்கமாக மாறியிருக்கிறார்கள். இப்போதும் இவர்களின் அரசியல் வைராக்கியத்திலும், பொறாமையிலும் குரோதத்திலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த மே தினத்தின்போதுஇ பௌத்த மத வழிபாடுகளில் ஈடுபடப்போவதாகக் கூறி நாம் கட்சி ரீதியாக ஒரு தீர்மானத்தை எடுத்தோம். அதற்குக்கூட எங்களை விமர்சித்தார்கள். மக்களின் நலனுக்காக மேடையில் பேசுவதற்குப் பதிலாகஇ எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதிலேயே அரசாங்கம் குறியாக இருந்தது. இன்று அரசாங்கம் அடக்குமுறையை கையில் எடுத்திருக்கிறது. ஜனாதிபதி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசுகிறார்இ தீர்ப்புகள் குறித்து முன்கூட்டியே முடிவுகளை அறிவிக்கிறார். ஒரு சட்டத்தரணியாகவும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியவராகவும் இருக்கும் நீதி அமைச்சர் இருக்கும்போதுஇ அரசாங்கம் இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

இன்று கிராமப்புறங்களில் பொருளாதாரப் பிரச்சினை மிகத் தீவிரமாக உள்ளது. தாங்க முடியாத வரிச்சுமையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். வருமானத்தை விட செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. வாரம் ஒருமுறை எரிபொருள் விலையும் மின்சாரக் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. அதற்குக் காரணம் கேட்டால், உலகச் சந்தையில் விலை உயர்வு என்றும்இ போர் என்றும் சாக்குப்போக்குகளைச் சொல்கிறார்கள். ஆனால் உலகிலேயே அதிக விலைக்கு கச்சா எண்ணெய் பீப்பாய்களை வாங்கியது இந்தப் போரினால் அல்ல, இவர்களின் முறையற்ற நிர்வாகத்தினால்தான்.

தபால் திணைக்களம் அமெரிக்கக் கணக்கு ஒன்றிற்குத் தவறுதலாக ஆறு லட்சம் டொலர்களைச் செலுத்தியது போரினால்தானா? அல்லது விவசாயிகளின் நெல்லுக்கு முறையான விலை கொடுக்க முடியாதது அமெரிக்கப் போரினால்தானா? அரசாங்கம் தனது ஊழல்களையும் திருட்டுகளையும் மறைக்கப் பார்க்கிறது. முன்பு கிராமங்களில் யாராவது திருடினால் 'திருடன் திருடன்' என்று கத்தி தப்பிப்பார்கள். இன்று இவர்கள் 'ஹேக்கர்' என்ற பெயரில் அந்த வேலையைச் செய்கிறார்கள். ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் ஒரு ஹேக்கரை நியமிக்கப் போகிறார்கள் போலும்.

மதத் தலைவர்களை அவமதிப்பதும், கலாசாரத்தைச் சீரழிப்பதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. மக்களைக் கோயில்களில் இருந்தும், பள்ளிகளிலிருந்தும் தேவாலயங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி ஒரு மதச்சார்பற்ற நாட்டை உருவாக்கப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. நாம் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கான ஒரு திட்டமிட்ட அரசியல் பயணத்தை நாம் உருவாக்கவேண்டும் என்றார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23