போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை கைது!

Published By: Digital Desk 1

07 May, 2026 | 02:15 PM
image

(நமது நிருபர்)

காலி - ஹபராதுவ பகுதியில் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன பகுதியில்  நேற்று  புதன்கிழமை (06)  பிற்பகல் அதிரடிப்படையினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

ராஜகிரியவில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தலைமையகத்துக்கு  கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்த  சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 280 கிராம் மற்றும் 150 மில்லி கிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர் 72 வயதுடைய பிரித்தானிய பிரஜை என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார்  மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23