ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 36ஆவது கூட்டத் தொடரின் இரண்டாம் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பமாவதை அடுத்து மனித உரிமைப் பேரவையின் முன்றலில் நீதிக்கான போராட்டம் என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துவதற்கு தமிழ் அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் பெருமளவான தமிழர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இடம்பெறும் உப குழுக் கூட்டங்களில் பங்பேற்பதற்காகவும் இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கிலும் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ ஜெனிவாவுக்குச் சென்றுள்ளார்.
நேற்று ஜெனிவாவைச் சென்றடைந்த வைகோவை ஈழத் தமிழ் அமைப்பின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர். இன்றைய போராட்டத்திலும் அவர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 16 வருடங்களுக்குப் பின்னர் வைகோ ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பல தடவைகள் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு அவர் விண்ணப்பித்திருந்த போதிலும் அவருக்கான விஸா அனுமதி வழங்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM