உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Published By: Digital Desk 3

07 May, 2026 | 01:43 PM
image

லாப் எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளை இன்று (07) வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் அதிகரித்து வரும் ஏனைய செலவுகளுக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

தற்போது லாப்  எரிவாயுவைப் பயன்படுத்தும் சுமார் 25% முதல் 30% வரையான உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் பாரிய நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், விலைத் திருத்தம் தவிர்க்க முடியாதது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பின்வரும் விலை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, 

சோறு, பிரியாணி மற்றும் நாசி கோரெங்: ரூ. 25 அதிகரிப்பு.

பால் தேநீர் ;  ரூ. 10 அதிகரிப்பு

சாதாரண தேநீர் ; ரூ. 5 அதிகரிப்பு

சிற்றுண்டிகள் : ரூ. 5 அதிகரிப்பு

விலை உயர்வு அறிவிக்கப்பட்ட போதிலும், முட்டை ரொட்டி மற்றும் பராட்டா ஆகிய உணவுகளின் விலைகளில் தற்போதைக்கு எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என ஹர்ஷன ருக்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23