கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால் நடத்தப்பட்ட "மார்க்கா-ஏ-ஹக் : சத்தியத்துக்கான போர்” ஆண்டு விழா

07 May, 2026 | 02:04 PM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் "மார்க்கா-ஏ-ஹக் - சத்தியத்துக்கான போர்” ஆண்டு விழா இன்று (7) நடைபெற்றது. 

குறித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயமானது தைரியம், நெகிழ்ச்சி மற்றும் இறையாண்மையின் மீதான தளராத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு மைல்கல்லாக "மார்க்கா-ஏ-ஹக்" அல்லது "சத்தியத்துக்கான போர்" (Battle for Truth) ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று ஒரு விசேட நிகழ்வை ஏற்பாடு செய்தது. 

சக பணியாளர்கள், இலங்கை ஆயுதப்படையினர் மற்றும் பாகிஸ்தான் ஆயுதப்படை அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடந்த நிகழ்வுகளை உயர்ஸ்தானிகர் நினைவுகூர்ந்தார். 

ஏப்ரல் 22ஆம் திகதி பஹல்காமில் நடத்தப்பட்ட ஒரு போலித் தாக்குதல் நடவடிக்கை (false flag operation) மற்றும் மே 6-7 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மே 10ஆம் திகதி தற்காப்புக்காகவும், மிகவும் பொறுப்புடனும் துல்லியமாகவும் பதிலடி கொடுத்ததோடு, இராணுவ நிலைகளை மட்டுமே இலக்கு வைத்தன என்று அவர் குறிப்பிட்டார். 

பாகிஸ்தானின் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை உறுதி செய்த ஆயுதப்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக இது அமைகிறது. 

இப்பகுதியில் நிலவும் ஸ்திரமற்ற தன்மைக்கு ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்பதை வலியுறுத்திய உயர்ஸ்தானிகர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களுக்கு இணங்க ஒரு நிலையான மற்றும் அமைதியான தீர்வினை காணுமாறு அழைப்பு விடுத்தார். 

பாதுகாப்பு விவகாரங்களுக்கு அப்பால், 241 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட பாகிஸ்தானை ஒரு "வாழும் அதிசயம்" என்று வர்ணித்த அவர், தொழில்நுட்பம், தொழில்முயற்சி, இராஜதந்திரம் மற்றும் கல்வித்துறை வரை பல்வேறு துறைகளில் நாட்டின் அபரிமிதமான மனித வளம் மற்றும் திறனை எடுத்துரைத்தார். 

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே பரஸ்பர மரியாதை, வர்த்தகம், கல்வி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் நிலவும் நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் இந்த நிகழ்வு அமைந்தது. 

நினைவேந்தல் உரையின் நிறைவில், இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள அனைத்து கூட்டு முயற்சிகளிலும் உண்மை, நீதி மற்றும் அமைதியை நிலைநாட்டும் உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார். 

எதிர்கால சந்ததியினரின் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் செழுமையை மேம்படுத்த இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

கடந்த கால தியாகங்களைக் கௌரவிக்கும் வகையில் சமாதானம், முன்னேற்றம் மற்றும் பரஸ்பர புரிதலுடன் கூடிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இந்த நிகழ்வு நிறைவு பெற்றது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிப்பு...

2026-05-12 15:32:05
news-image

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல்...

2026-05-12 14:58:15
news-image

பேராசிரியர் வித்யாநிதி எம்.எஸ். மூக்கையா காலமானார்

2026-05-12 15:29:22
news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27