சீனாவுடனான சமநிலையற்ற வர்த்தகம் புதிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துமா?

07 May, 2026 | 12:25 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பொருளாதார வீழ்ச்சியின் அச்சம் இன்னும் இலங்கையை விட்டு நீங்காத நிலையில், சீனாவுடனான ஒருதலைப்பட்சமான வர்த்தக உறவு புதியதொரு கட்டமைப்பு ரீதியான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டில், இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 5.5 பில்லியன் டொலரை எட்டியதன் மூலம், இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்த இந்தியாவை சீனா முந்தியதியுள்ளது.

இருப்பினும், இந்த வளர்ச்சி ஒரு ஆபத்தான 'தலைகீழ்' வர்த்தக போக்கைக் காட்டுவதாக கூறப்படுகிறது. இலங்கையின் சீன இறக்குமதி 5.2 பில்லியன் டொலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 337 மில்லியன் டொலராக மட்டுமே உள்ளது. நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறையான இந்த 4.9 பில்லியன் டொலர், சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள் மூலம் பெறப்பட்ட பலவீனமான பொருளாதார மீட்சியைச் சிதைக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சந்தை விலையை விடக் குறைவான இறக்குமதிகள் இந்த ஏற்றத்தாழ்வுக்குக் காரணமாகும். சீனாவின் 'புதிய தரமான உற்பத்தி சக்திகள்' (New quality Productive Forces) என்ற உத்தியாகும். சீன அரசு தனது உற்பத்தித் துறைக்கு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 வீதத்தை மானியமாக வழங்குகிறது. இதன் மூலம் சீன நிறுவனங்கள் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் பொருட்களை சந்தையில் குவிக்கின்றன.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, சீன மின்சார வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் இறக்குமதி பெப்ரவரி மாதத்தில் மட்டும் 107 வீதம் அதிகரித்துள்ளது. இத்தகைய மானியம் வழங்கப்பட்ட பொருட்களுடன் போட்டியிட முடியாமல் உள்ளூர் தொழில்துறைகள் பாதிக்கப்படுகின்றன. இது சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் மூலம் ஈட்டப்படும் அந்நியச் செலாவணியை குறைக்கிறது.

தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இலங்கைக்கு சந்தை வாய்ப்பை வழங்கும் என்று கூறப்பட்டாலும், அது சீரற்ற தாராளமயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சீனா தனது விவசாயம் மற்றும் ஆடைத் துறைகளைப் பாதுகாக்கப் பல கட்டுப்பாடுகளை விதிக்கும் அதே வேளையில், இலங்கையின் சந்தையில் தனது உற்பத்திப் பொருட்களுக்கு உடனடி வரி விலக்கைக் கோருகிறது.

இவ்வாறானதொரு நிலையில், பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க இலங்கை ஆக்கப்பூர்வமான  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, மிகவும் சமநிலையான சந்தையான இந்தியாவோடு வர்த்தகத்தை அதிகரித்தல் அவசியமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் குறிப்பிட்ட துறை சார்ந்த ஒப்பந்தங்களை முன்னெடுத்தல் சிறந்த பலனை தரும்.

அத்துடன்  மானியம் வழங்கப்பட்ட இறக்குமதிப் பொருட்கள் மீது வரிகளை விதிப்பதன் மூலம் உள்ளுர் உற்பத்தித் துறையைப் பாதுகாக்க முடியும். இறுதியாக, இலங்கை தனது நீண்டகால பொருளாதார இறையாண்மையைத் தக்கவைக்க வேண்டுமானால், சீனப் பொருட்களின் செயலற்ற நுகர்வோராக இருப்பதை நிறுத்திவிட்டு, பரஸ்பர நலன் சார்ந்த மற்றும் சமநிலையான வர்த்தகக் கொள்கையை நோக்கி நகர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23