(செ.சுபதர்ஷனி)
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய 34 இலட்சம் பேர் இதுவரை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 2,163 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை (06) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் கைது நடவடிக்கைகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட 'முழு நாடுமே ஒன்றாக' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 01 இலட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கைதான சந்தேகநபர்களில் 315 பேருக்கு எதிராகக் குற்றவரும்படித் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2,740பேர் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 2,022 பேரைப் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்புகளின் போது பொலிஸாரால் 1,935 கிலோகிராம் ஹெரோயின், 5,435 கிலோகிராம் கஞ்சா, 1,989 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 271 கிலோகிராம் கொக்கைன், 430 கிலோகிராம் குஷ்ரக போதைப்பொருள் மற்றும் சுமார் 15 இலட்சம் போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் நாட்டில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய 34 இலட்சம் பேர் இதுவரை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சோதனைகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 2,163 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 31,039 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 19,006 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் 1,088 கிலோகிராம் ஹெரோயின், 355 கிலோகிராம் கொக்கைன், 659 கிலோகிராம் ஐஸ் மற்றும் 15 இலட்சம் போதை மாத்திரைகள் என்பன அழிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டில் தங்கியிருந்த 33 பேர் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்களில் 16 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. எனினும், குறித்த நபர்களும் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு இராஜதந்திர முறையில் நாடுகடத்தப்பட்டுள்ளனர். மேலும் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 94 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM