பரபரப்பான முடிவை நோக்கி தம்புள்ளை - கொழும்பு அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் இறுதிப் போட்டி

Published By: Digital Desk 3

07 May, 2026 | 09:18 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பரபரப்பான முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

கொழும்பு  ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தம்புள்ளை அணிக்கும் கொழும்பு அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் எந்த அணியும் வெற்றிபெற்று சம்பியனாகலாம் என்ற நிலை காணப்படுகிறது.

போட்டியில் வெற்றி பெறுவதற்கு கொழும்பு அணிக்கு மேலும் 145 ஓட்டங்கள் தேவைப்படுவதுடன் தம்புள்ளை அணிக்கு 6 விக்கெட்கள் வீழ்த்தப்பட வேண்டியுள்ளது.

299 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் கொழும்பு அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கொழும்பு அணி சார்பாக திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தனஞ்சய லக்ஷான் நேற்றைய ஆட்ட நேரத்தின் கடைசிக் கட்டத்தில் ஆட்டம் இழந்ததும் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

இந்தப் போட்டியில் தம்புள்ளை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களையும் பெற்றது.

கொழும்பு அணி முதல் இன்னிங்ஸில் 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

எண்ணிக்கை சுருக்கம்

தம்புள்ளை 1வது இன்: 222 - 9 விக். டிக்ளயார்ட் (சொனால் தினூஷ 51, அஞ்சல பண்டார 40, பவன் ரத்நாயக்க 39, ப்ரபாத் ஜயசூரிய 54 - 4 விக்., ஜனித் லியனகே 18 - 2 விக்., தனஞ்சய லக்ஷான் 42 - 2 விக்.)

கொழும்பு 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 146 (சண்முகநாதன் ஷாருஜன் 44, சரித் அசலன்க 27, கவிஜ கமகே 25, கவிந்து பத்திரண 51 - 5 விக்., அக்கில தனஞ்சய 17 - 3 விக்.)

தம்புள்ளை 2வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 222 (அக்கில தனஞ்சய 53, நிஷான் மதுஷ்க 43, அஞ்சல பண்டார 32, சமோத் பண்டார 55 - 4 விக்., ப்ரபாத் ஜயசூரிய 16 - 3 விக்.)

கொழும்பு 2ஆவது இன்: வெற்றி இலக்கு 299 ஓட்டங்கள் - 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் - 154 - 4 விக். (தனஞ்சய லக்ஷான் 84, சரித் அசலன்க 29 ஆ.இ., நுவனிது பெர்னாண்டோ 23)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பீபா உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களுக்கான...

2026-06-17 12:09:41
news-image

அயர்லாந்துடனான போட்டியில் இங்கிலாந்துக்கு இறுக்கமான வெற்றி;...

2026-06-17 09:18:35
news-image

நிலக்ஷிகா, கௌஷினி துடுப்பாட்டத்தில் அபாரம்; இலங்கையிடமும்...

2026-06-17 03:54:20
news-image

இலங்கைக்கு 151 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-06-16 20:59:21
news-image

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான தீர்மானம் மிக்க...

2026-06-16 18:52:01
news-image

மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சியக அணி 231; ...

2026-06-16 04:30:26
news-image

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில்...

2026-06-16 11:19:49
news-image

நெதர்லாந்துடனான பீபா உலகக் கிண்ணப் போட்டியை...

2026-06-15 13:10:51
news-image

இலங்கையுடனான ரி20 தொடரை 2 -...

2026-06-15 12:38:59
news-image

கியூராகாஓ அணிக்கு எதிரான உலகக் கிண்ணப்...

2026-06-15 04:56:59
news-image

மந்தனா, தீப்தி ஷர்மா அபாரம்; பாகிஸ்தானை...

2026-06-15 04:53:11
news-image

மிஷார, ஷானக்க துடுப்பாட்டத்திலும் சமீர, ஹசரங்க...

2026-06-14 10:40:37