(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பழைய தேர்தல் முறையில் இம்முறை மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்காலிக ஏற்பாடு ஒன்றை கொண்டுவருவது குறித்து ஆராய்வதற்கு எதிர்வரும் 21ஆம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவை செயற்குழுவுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணய ஆணைக்குழு எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பான அறிக்கை ஒன்றை செயற்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது.
2017 மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புக்கள், மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கக் கிடைக்கக்கூடிய சட்ட விதிகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் அறிக்கை சமர்ப்பிக்காததற்கு குழுவின் உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம், நிசாம் காரியப்பர் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதனைத் தொடர்ந்து எதிர்வரும் கூட்டங்களின் போது சட்டமா அதிபர் அல்லது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஆகியோரை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அதன் தலைவர் விஜித்த ஹேரத் தலைமையில் கூடியது.
கடந்த குழு கூட்ட த்தில் 2017 மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புக்கள்,மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கக் கிடைக்கக்கூடிய சட்ட விதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் விஜித்த ஹேரத் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.இருப்பினும் நேற்றைய தினம் நடைபெற்ற குழு கூட்டத்தின் போது சட்ட மா அதிபர் திணைக்களம் அந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராயும் இந்த குழு இதுவரையில் மூன்று தடவை கூடியுள்ளது. இருப்பினும் முன்னேற்றகரமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் உணர முடியவில்லை.
கடந்த குழு கூட்டத்தில் கோரப்பட்ட அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களம் சமர்ப்பிக்கவில்லை. மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் மிதமான போக்கினையே கடைப்பிடிக்கிறது. ஆகவே இனி வரும் கூட்டங்களின் போது சட்டமா அதிபர் அல்லது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குழுவின் எதிரணியின் உறுப்பினர்களான மனோ கணேசன், நிசாம் காரியப்பர் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இதனை வழிமொழிந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த குழுவின் உறுப்பினர் நிசாம் காரியப்பர், மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையில் நடத்துவது என்பதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் எவ்விட நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இது ஏற்றுக்கொள்ள கூடியதொரு செயற்பாடல்ல என்றார்.
மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் இம்முறையில் நடத்துவதற்கு தற்காலிக ஏற்பாடு ஒன்றை கொண்டு வருவது குறித்து ஆராய்வதற்கு எதிர்வரும் 21ஆம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவை செயற்குழுவுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எல்லை நிர்ணய ஆணைக்குழு எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பான அறிக்கை ஒன்றை செயற்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM