திறைசேரியின் முன்னாள் அதிகாரி  ரங்க ராஜபக்ஷவின் மரணம் : அரச உத்தியோகத்தர்கள் உண்மையை மறைக்க முயற்சி ; விசாரணைகள் மீது நம்பிக்கையில்லை - முஜிபுர் ரஹ்மான் 

06 May, 2026 | 07:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

திறைசேரியின் முன்னாள்  அதிகாரியான  ரங்க ராஜபக்ஷவின் மரணம்  தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் உண்மையை மூடி மறைக்கவே முயற்சிக்கிறார்கள். ரங்க ராஜபக்ஷவின் மீது விழுந்த கத்தி உங்கள் மீதும் விழும் என்பதை  அரச உத்தியோகத்தர்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம்.  இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும்  விசாரணைகள் மீது நம்பிக்கையில்லை.சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

 பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (6) நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகின்ற நிலையில்,  அது குறித்து விவாதிப்பதற்கு அரசாங்கம்  இடமளிக்கவில்லை.இந்த விடயத்தை அரசாங்கம் மூடி மறைக்கவே முயற்சிக்கவில்லை. 2.5 மில்லியன் டொலர் என்பது அரசாங்கத்துக்கு   பெரியதொரு விடயமல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு அது  பாரியதொரு விடயமாகும்.

இந்த மோசடி குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையாக செயற்படவில்லை. அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு ஓடி வந்து அரசாங்கத்தை தூய்மைப்படுத்துவார். ஆனால்  2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்து நிதியமைச்சரான  ஜனாதிபதி இதுவரையில் ஏதும்  பேசவில்லை. நிதியமைச்சரும் காணாமல் போயுள்ளார்.

  திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன்  டொலர்  மோசடி தொடர்பில்  தகவல்களை வெளியிட்ட காரணத்தால் தான் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்   நான்கு அதிகாரிகள் பணி நீக்கப்பட்டார்கள். கடமையை நிறைவேற்றாதற்கு பதவி நீக்க வேண்டுமாயின்  நிதியமைச்சின் செயலாளரையே  முதலில் பதவி நீக்க வேண்டும்.

திறைசேரியின் முன்னாள் அதிகாரி  உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட குழு, ரங்க ராஜபக்ஷ தற்கொலை செய்துக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை குழு குறிப்பிடவில்லை. இவரது மரணம் தொடர்பில் அவரது மனைவி பொலிஸ் முறைப்பாடளிக்கவில்லை என்று  நீதியமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் அது முற்றிலும் பொய்யானது. முறைப்பாடளித்த பத்திரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

2.5 மில்லியன் மோசடி  ஒரு கூட்டு சதியா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இந்த விடயத்தில் அரசாங்கம் வெளிப்படையாக செயற்படவில்லை. தற்போது கடந்த கால ஊழல் மோசடிகள் பற்றி பேசப்படுகிறது. பிணை முறி மோசடியை குறிப்பிட்டு 2.5 மில்லியன் மோசடியை நியாயப்படுத்தவே முயற்சிக்கிறார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கமே தற்போது  ஆட்சியில் உள்ளது. ஆகவே உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

கடந்த அரசாங்கம்  அரசியல்வாதியான அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்ததை  போன்று தான் இந்த அரசாங்கமும்  அரசியல்வாதி ஒருவரை திறைசேரியின்  செயலாளராக நியமித்துள்ளது. அவரது தகுதி பற்றி தற்போது  கேள்வி எழுந்துள்ளது.

உயிரிழந்த ரங்க ராஜபக்ஷ தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் உண்மையை மூடி மறைக்கவே முயற்சிக்கிறார்கள். ரங்க ராஜபக்ஷவின் மீது விழுந்த கத்தி உங்கள் மீதும் விழும் என்பதை  அரச உத்தியோகத்தர்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம்.  இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும்  விசாரணைகள் மீது நம்பிக்கையில்லை.சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல என்பதற்கு...

2026-09-15 14:33:38
news-image

பிள்ளையான், கருணாவை நல்வழிப்படுத்தியதைப் போன்று அர்ச்சுனாவையும்...

2026-09-15 17:26:28
news-image

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க...

2026-09-15 15:36:33
news-image

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் பொலிஸ்,...

2026-09-15 17:27:58
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51