இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் அத்தகைய பாதிப்பு ஏற்படுமா...?

06 May, 2026 | 06:44 PM
image

எம்மில் சிலர் இதயத்தில் உள்ள ரத்த நாள பகுதியில் கொழுப்பு படிவுகள் படிந்திருப்பதால்.. ரத்தநாள அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இவர்களுக்கு வைத்திய நிபுணர்கள் ஸ்டென்ட் எனும் மெல்லிய உலோகத்தாலான கட்டமைப்பை இதய ரத்த நாளப்பகுதியில் பொருத்தி.. குருதி ஓட்டத்தை  சீராக்கி இருப்பர். இதற்குப் பிறகு பெரும்பாலான நோயாளிகள் மீண்டும் தங்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படாது என நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஆனால் வைத்தியர்கள் அறிவுறுத்திய வாழ்க்கை நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற தவறினால்.. இத்தகைய உலோக கட்டமைப்பு பொருத்தப்பட்ட இடத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

பொதுவாக இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தால்.. அவர்களுக்கு ஸ்டென்ட் ஓஞ்சியோபிளாஸ்ரி எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணத்தை வழங்கி இருப்பார்கள். இத்தகைய நிவாரண சத்திர சிகிச்சை இதயத்தில் குறிப்பிட்ட ரத்த நாள அடைப்பை நீக்குவதற்கான சிகிச்சை மட்டும்தான். இதற்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைத்த வாழ்க்கை நடைமுறையை முழுமையாக கடைப்பிடிக்காவிட்டால்... மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். அதாவது சத்திர சிகிச்சை மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட இதய ரத்த நாளப்பகுதி மீண்டும் குறுகி விடுவதால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாதவர்கள்.. குருதி அழுத்த பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதவர்கள்... கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்.. தொடர்ந்து புகை பிடித்ததில் ஈடுபடுபவர்கள்... வைத்தியர்கள் பரிந்துரைத்த மருந்தியல் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ளாமல்.. புறக்கணித்தவர்கள் ஆகியோர்களுக்கு இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் ரீஸ்டினோசிஸ் என குறிப்பிடுகிறார்கள். சிலருக்கு இதய ரத்த நாள அடைப்பை சீராக்குவதற்காக பொருத்தப்பட்ட உலோக கட்டமைப்புக்குள் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இதன் காரணமாக வைத்தியர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கை நடைமுறையை முழுமையாக பின்பற்ற வேண்டும். மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால்.. அவர்களுக்கு மீண்டும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரத்த நாள அடைப்பு தொடர்பான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.

வைத்தியர் ஸ்ரீ குமார் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும்...

2026-05-11 16:55:02
news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07
news-image

அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-04-24 17:37:23