தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'சேயோன் ' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி தென்னிந்திய நட்சத்திர நடிகையான பாக்ய ஸ்ரீ போர்சேவின் பிரத்யேக புகைப்படத்தை அவருடைய பிறந்த நாளை கொண்டாடும் வகையில் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
'தாய் கிழவி' எனும் பிரம்மாண்டமான வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தயாராகி வரும் 'சேயோன் ' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை பாக்யஸ்ரீ போர்சே.
இவர் ஏற்கனவே தமிழில் வெளியான 'கிங்டம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர். இவர்களுடன் நடிகர்கள் அருள்தாஸ் மற்றும் பால சரவணன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில்.. இப்படத்தில் நடித்து வரும் நடிகை பாக்ய ஸ்ரீ போர்சேவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை படக் குழுவினர் வெளியிட்டு சிறப்பித்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM