மெகசின் சிறைச்சாலை கைதி உயிரிழப்பு - கைதான 3 அதிகாரிகளும் அடையாள அணிவகுப்பில் அடையாளம்

06 May, 2026 | 06:37 PM
image

(செ.சுபதர்ஷனி)

வெலிக்கடை  மெகசின்  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘மஞ்சு’ எனப்படும் கைதி, அதிகாரிகள் குழுவொன்றின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று புதன்கிழமை (6) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இலக்கம் 2இல் இடம்பெற்றது.

இதன்போது நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தளகஸ்வத்தகே சம்பத் குஷான், மீகஹகே டொன் சுரேஷ் தர்ஷன பெரேரா மற்றும் திஸாநாயக்க முதியன்சேலாகே உபுல் திஸாநாயக்க ஆகிய மூன்று அதிகாரிகளுமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவ்வழக்கில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 சாட்சியாளர்களும் வெவ்வேறு மட்டங்களில் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியதுடன், அவர்களில் நால்வர் 3 அதிகாரிகளையும் துல்லியமாக அடையாளம் காட்டியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.பி. துஷார சம்பத் (38) எனப்படும் ‘மஞ்சு, ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது சிறை அதிகாரிகளின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இச்சம்பவத்தில் மற்றொரு கைதியும் காயமடைந்திருந்தார். இது தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், குறித்த மூன்று அதிகாரிகளும் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனக்க பெரேரா, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சந்தேகநபர்களுக்குப் பிணை அவசியமெனில் அவர்கள் மேல்நீதிமன்றிலேயே பிணை மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  இந்நிலையில் சந்தேக நபர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47