(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கிறிஸ்தவரான தந்தை செல்வாவை தமது தானைத் தலைவராக ஏற்று ஈழத் தமிழர்கள் முன்மாதிரியாக திகழ்ந்தனர். அதேபோன்று தமிழ்நாட்டு மக்களும் மொழி அடையாளதத்தை முன்னிறுத்தி கிறிஸ்தவரான ஜோசப் விஜய்யை தமது தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ்நாட்டில் முதலமைச்சராக பிரபல சினிமா நட்சத்திரமாக எங்களுக்கு அறிமுகமான ஜோசப் விஜய் பதவியேற்கவுள்ளார். எவ்வித தயக்கமும் இன்றி தன்னை கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்தியவர். அதுவரையில் தன்னை தளபதி விஜய் என்று அடையாளப்படுத்தி கூறியவர் தற்போது ஜோசப் விஜய் என்று கூறியதன் மூலம் தான் சார்ந்திருந்த சமயத்தை அடையாளப் படுத்தும் பெயரை தயங்காமல் குறித்து பேசி, இன்று முழு தமிழகத்திலும் அதிகூடிய ஆசனங்களை வென்றுள்ள தளபதி விஜய்க்கு எமது கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன்.
சமயம் சார்ந்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அவ்வாறான பாரம்பரியம் இருக்கக்கூடாது, மொழி அடிப்படையில் ஒரே மொழியை பேசும் இனமாக நாங்கள் எங்களை பெருமையுடன் அடையாளப்படுத்த வேண்டும் என்று தமிழ் பேசும் மக்களிடையே அந்த உணர்வை தூண்டுகின்ற அந்த கருத்து வலுப்பெற்றதானது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் மூலம் என்பதனை சுட்டிக்ககாட்ட வேண்டும்.
அதேபோன்று எல்லாவற்றையும் முந்திக்கொண்டு இலங்கையிலேயே தந்தை செல்வா எனப்படும் தனிப்பெரும் ஆளுமையை ஒரு கிறிஸ்தவர் என்பதற்காக ஒதுக்கிவிடாமல் தங்களுடைய தானைத் தளபதியாக வரித்துக்கொண்டதன் மூலம் ஈழத்து மக்களே முதலில் எந்த மத அடையாளத்திற்கும் அடிமைப்படாமல் தமது மொழி அடையாளதத்தை முன்னிறுத்தி ஒரு தேசிய அடையாளத்திற்கு வழியேற்படுத்தினர் என்பது பெருமையுடன் கூறிக்கொள்ளும் விடயமாகும்.
இதேவேளை இந்தத் தேர்தலில் கேரளா மாநிலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி 22 உறுப்பினர்களை வென்றெடுத்திருக்கிறது. அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாநிலத்தில் இவர்கள் ஐந்து அமைச்சரவை ஆசனங்களையும் துணை முதலமைச்சர் பதவியையும் பெற இருக்கின்றனர்.
அதேநேரம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் இந்திய முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேநேரம் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் எமது கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம் விஜய் தேர்தல் காலங்களில் குறிப்பாக கச்சதீவை பற்றி பேசியிருந்தார். இரண்டு இறைமையுள்ள நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டிருக்கும் விவகாரம் தொடர்பில் கதைப்பதைவிட, அதனைவிடவும் மிக முக்கியமான, கவிஜர் பாரதி சொன்னதுபோல் தமிழ் நாட்டுக்கும் இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் வாழுகின்ற வடக்கிற்கும் இடையில் பாலம் அமைக்க அவர் கூடிய கவனம் செலுத்தவேண்டும். அதற்காக அவர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM