உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்ற பரஞ்சோதி மகானின் ஜனன நிஷ்டை நிகழ்வு

06 May, 2026 | 06:06 PM
image

குண்டலினி தவம் எனும் தியானத்தை பற்றிய தத்துவார்த்த விளக்கங்களை வழங்கி, மக்களிடத்தில் ஞானம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய ஞான வள்ளல் பரஞ்சோதி மகானின் 126 ஆவது ஜனன விழா - நிஷ்டை சென்னையில் உள்ள உலக சமாதான ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் உருவாக்கிய உலக சமாதான ஆலயத்தின் தற்போதைய தலைமை குருவான நூருதீன் தலைமையில் நடைபெற்ற ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் 126 ஆவது ஜனன- நிஷ்டை விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மெய் உணர்வாளர்கள் பங்கு பற்றினர். 

முன்னதாக இங்கு சமாதி நிலை அடைந்திருக்கும் ஞானவள்ளல் பரஞ்சோதி மகானின் நினைவிடத்தில் உலகம் முழுவதிலும் இருந்து வருகை தந்த மெய்யுணர்வாளர்கள் தியானம் செய்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து வருகை தந்திருந்த மெய்யுணர்வாளர்களிடம் பஞ்சபூத சிகிச்சை எனும் மருந்தில்லா மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்த வைத்தியர் ஆதி ஜோதி பாபு நிகழ்த்திய சிறப்புரையில்..'' எம்முடைய குரு ஞான பரஞ்சோதி என்பவரின் குரு தான் ஞானவள்ளல் பரஞ்சோதி மகான். தியானத்தில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில் பல வினாக்களை அவரிடம் எழுப்பி இருக்கிறேன். அதிலும் எட்டு என்ற எண்ணின் பின்னணியில் இருக்கும் புதிர் குறித்து பல வினாக்களை எழுப்பி இருக்கிறேன். அதற்கு அவர்..

'நானே நீ, நீயே நான்

நானும் நீயே நானே நான்

எட்டாத தரற்பரத்தை எட்டி எட்டி உட்புறமாய்

உட்சென்று ,உற்று நோக்க.. நோக்க.. அப்பரமும் இப்பரமும், ஏக பராபரமும் என்னுள் நான் அறிந்தேன்..'' எனும் அவருடைய விளக்கத்தின் மூலம் உணர்ந்தேன்.

தொடர் தியானங்களில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில் குறிப்பாக குண்டலினி தியானத்தில் ஈடுபட்டிருக்கும் போது.. புதிதாக ஐந்து நிலைகளை கண்டறிந்தேன். அதற்குரிய காப்புரிமையும் இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளேன்.'' என்றார்.

இதனிடையே வைத்தியர் & கலாநிதி திரு. ஆதி ஜோதி பாபு குண்டலினி தியானத்தில் 38 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், இந்த தியானத்தில் புதிய பரிமாணங்களை கண்டறிந்து அதன் வடிவமைப்பு காப்புரிமையை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றவர் என்பதும், தமிழகத்தில் அமைந்துள்ள ஏ ஜி காஸ்மிக் கிளினிக் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும், பேராசிரியராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து உலக சமாதான ஆலயத்தின் தலைமை குருவான குரு பிரான் நூருதீன்-  ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் வழங்கிய தத்துவத்தை அங்கு வருகை தந்த அனைத்து மெய்யுணர்வாளர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் உரிய உதாரணத்துடன் விளக்க உரையை நிகழ்த்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடனை‌ திருப்பி செலுத்துவதற்கான எளிய குறிப்பு..!?

2026-06-17 16:17:12
news-image

தொடர் தோல்வியை மாற்றியமைப்பதற்கான எளிய வழிமுறை!

2026-06-16 17:04:51
news-image

கண் திருஷ்டியை நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2026-06-15 17:12:49
news-image

புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-12 14:13:00
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..!?

2026-06-11 17:16:42
news-image

பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும்..?

2026-06-10 16:42:14
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-06-09 18:14:07
news-image

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான பிரத்யேக...

2026-06-08 17:05:52
news-image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

2026-06-05 16:03:16
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-06-04 16:58:05
news-image

மனதின் அச்சம் நீங்குவதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-03 15:14:02
news-image

வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

2026-06-02 17:58:16