பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்திச் சபை மற்றும் கொழும்பு தமிழ்ச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026" கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் மே மாதம் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இடம் பெற உள்ளதோடு கண்காட்சி மற்றும் விற்பனைக் கூடங்களை மே மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணியளவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, சூழலியல் மற்றும் பொருளாதாரத்தோடு இரண்டறக் கலந்துள்ள கற்பகதருவான பனையின் பெருமையை எடுத்தியம்பும் வகையில் இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பனை சார் உற்பத்திப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் பனையின் பயன்பாடுகள் தொடர்பான விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன. அனைவரையும் இக்கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM