இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் ஆரம்பித்த பணி நிறுத்த போராட்டத்திற்கு நாளை நள்ளரவு தொடக்கம் இலங்கை மின்சார சபை தொழில் நுட்ப பொறியியலாளர் மற்றும் உதவி மின்சார அத்தியட்சகர்கள் ஒன்றிணைவதற்கு தீர்மானித்துள்ளனர்.

Image result for மின்சார சபை ஊழியர்களுக்கு virakesari

இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்று 5வது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.

இதேவேளை, குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக ட்ரான்ஸ்போமர்கள் மற்றும் மின்கம்பிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது.

கிடைத்துள்ள சில முறைப்பாடுகள் மற்றும் அசம்பாவிதங்கள் தொடர்பில் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.