தமிழக முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து ; இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கிறோம் - ஜீவன் தொண்டமான் எம்பி

Published By: Digital Desk 3

06 May, 2026 | 06:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் அநுர குமாரவைப் போன்றே  தமிழகத்தில் விஜயும் ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆனால் ஒரேயொரு வித்தியாசம், என்னவென்றால் விஜய் நடித்து முடித்த பின்னர் அரசியலுக்கு வந்தார். இவர்கள் அரசியலுக்கு வந்த பின்னர் நடிக்கின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அநுரகுமாரவை போன்றுதான் விஜயும்  ஆட்சியைப்  பிடித்துள்ளார் என்று ஆளும் தரப்பில் உள்ள சிலர் கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்கின்றேன். இங்கு நாங்கள் கண்ட மாற்றம் வேண்டும் என்ற உணர்வுதான் அங்கேயும் இருந்தது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்தான், விஜய் நடித்து முடித்த பின்னர் அரசியலுக்கு வந்தார். இவர்கள் அரசியலுக்கு வந்த பின்னர் நடிக்கின்றனர்.  

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை விடயத்தில் தேர்தலுக்கு முன்னால் இருந்த விடயம் வேறு, தேர்தலுக்கு பின்னால் இருக்கும் நிலைமை வேறாகவே இருக்கின்றது. ஜனாதிபதி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில்தான் சில உறுப்பினர்கள் பிழைத்துக்கொண்டிருக்கின்றனர். இதனை அவர்கள் புரியாமல் இருக்கின்றனர்.

இந்தியாவின் துணை ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்த போது நீங்கள் மலையகத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போது, லிடேஸ்லே வீட்டுத்திட்டத்திற்கே அழைத்துச் சென்றுள்ளீர்கள். இது 2021இல் எங்களால் முடிக்கப்பட்ட வீட்டுத்திட்டம். இதன்மூலம் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு வீடு கூட கட்டிக்கொடுக்கவில்லை என்பதே அர்த்தம். இவ்வாறிருக்கையில் எங்களுக்கு இதுபற்றி பேச அருகதை இருக்கின்றதா? என  கேட்கின்றனர். நீங்கள் விமர்ச்சித்து அரசியல் செய்கின்றீர்கள். அதனை விடுத்து வேறு என்ன வேலை செய்துள்ளீர்கள்? மலையக மக்கள் தொடர்பில் கதைப்பதற்கு எங்களுக்கு பூரண உரிமையும் அருகதையும் இருக்கிறது. அந்த மக்களுக்கு நாங்கள் எமது ஆட்சிக்காலங்களில் முடியுமான வேலைத்திட்டங்களை செய்திருக்கிறோம்.

நீலகாமம் தோட்டத்தில் பிரச்சினை நடந்தது. அதன்போது நாங்கள் போய் முகம்கொடுத்தோம். அதுபோன்று பல இடங்களில் சம்பவங்கள் நடந்துள்ளன. மலையக மக்கள் அதிகமான நம்பிக்கையுடன் ஜனாதிபதியை கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவர்களின் பிரதிநிதிகள் அறிக்கைகள் விடுவதையும் கலந்துரையாடல்கள் நடத்துவதையுமே செய்கின்றனர். வேறு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஆதரவாக வாக்களித்தோம். மாற்றம் வரும் என்று நம்பியே வாக்களித்தோம். ஆனால் நீங்கள் எங்களை சுரண்டுகின்றீர்கள். அதனால் தொடர்ந்தும் நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்க வேண்டாம்.

மலையக மக்கள் தொடர்பில் நான் தொடர்ந்து கேட்டுவரும் இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். காணி உரிமை வழங்குவீர்களா? மாட்டீர்களா? வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவீர்களா? மாட்டீர்களா? தோட்டப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவீர்களா? இல்லையா?

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது அப்போதைய பொலிஸ்மா அதிபர் ஊடாக சில தெளிவான தீர்மானங்களை கொண்டுவந்தோம். தோட்டப்புறங்களில் நடக்கும் பிரச்சினைகளுக்கு பொலிஸ் முடிவு கட்ட வேண்டும் என்பதாகும். ஆனால் பொலிஸாரே தோட்டங்களுக்குள் சென்று மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அரசாங்கத்தை பொறுத்த வரையில் மேதினத்தை நடத்தினீர்கள். நாங்கள் நடத்தவில்லை. இது முதல்தடவையல்ல. எதை எப்போது செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். முடிந்தால் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். இல்லாவிட்டால் விமர்சிப்பதை நிறுத்துங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39