(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
விஷேடக் குழு ஒன்றினை நியமித்து ஆராய்ந்து தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க அல்லது அவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்கட்சியின் வன்னிமாவட்ட உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி கேட்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கடந்த கால உள்நாட்டு யுத்த சூழ்நிலையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் அதனோடு அண்டிய வேறு மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களிலும் ஏற்பட்ட ஆசிரியர் இன்மை காரணமாக தொண்டர் ஆசிரியர்களை கற்பித்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தினோம்.
பின்னர் அனேகமானோருக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டன. எனினும் தேவையான தகைமைகளைக் கொண்ட தொண்டர் ஆசிரியர்கள் பலர் நேர்முகப்பரீட்சைகளில் பங்கு பற்றியும் பங்குப்பற்றாமலும் இதுவரை நிரந்தர நியமனத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த அரசாங்க காலத்தில் ஆசிரியர்களுக்கு நிரந்தரம் நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான தொண்டர் ஆசிரியர்களுக்கான அமைச்சரவைப் பத்திரம் சாதகமாக அமையாத காரணத்தினால் குறிப்பிட்டளவு விடுபட்டுள்ளனர். இதற்கு தேர்தல் காலம், பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அமைந்தன.
எனவே இவர்களுக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குவது மிக முக்கிமானதொரு விடயமாக சுட்டிக்காட்டி, பின்வரும் கேள்விகளுக்கு நியாயமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
சிறுவர் பாடசாலைக் கல்வி ஒழுங்குபடுத்தபட்டு நிரந்தரமான முழு நாட்டிற்கும் பொதுவான சிறுவர் பாடசாலைக் கல்வி முறையினை ஏற்படுத்தி சிறுவர் பாடசாலை ஆசிரியர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முடியுமா?
சகல சிறுவர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதோடு அவர்களுக்குரிய சம்பளத் திட்டமும் ஏனைய சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
இரண்டு வருட சிறுவர் பாடசாலைக் கல்வியை இல்லாமலாக்கி முதலாம் தரத்திற்கும் சிறுவர் பாடசாலைக்கல்விக்கும் இடையில் ஒரு கல்வி முறையினை உருவாக்குவதும் முதலாம் தரத்தில் சேர்ப்பதற்கான வயதெல்லையை ஐந்து ஆக்குவது தொடர்பான ஆய்வுகளையும் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியுமா?
2014 ஆம் ஆண்டு தேசிய பாடசாலையாக்கப்பட்ட எந்த பாடசாலைக்கும் ஆளணி செய்யப்படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள்?
யுத்த சூழ்நிலைகளையும் அதற்கு பிந்திய புனரமைப்பு நிலையையும் கருத்தில் கொண்டு கடந்த காலத்தில் அமைச்சரவை அனுமதியுடன் பிரதானமாக வடக்கு ,கிழக்கு மாகாணம் இது தவிர்ந்த நாட்டின் ஏனையபகுதிகளிலும் தொண்டர் ஆசிரியர்களாக கடமைபுரிந்த பலருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதில் சிலர் நேர்முகப்பரீட்சைக்கு முகம்கொடுத்தும் அரசியல் காரணங்களினால் அவர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிவிர்களா?
அவ்வாறான தொண்டர் ஆசிரியர்கள் வேறு வேலைகளுக்கு முயற்சிக்காமலும் அரச சேவைக்கான வயதெல்லையை கடந்தும் காத்திருக்கின்ற துர்ப்பாக்கிய நிலையை அறிவீர்களா?
அவ்வாறானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாதவிடத்து அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் குடும்ப பொருளாதார நிலையையும் கருத்திற்கொண்டு விஷேடக் குழு ஒன்றினை நியமித்து ஆராய்ந்து தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க அல்லது அவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட முடியுமா? என கேட்கிறேன் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM