நீதித்துறையில் நிறைவேற்றுத்துறை அழுத்தம் ; பாராளுமன்ற விவாதம் கோரிய எதிர்க்கட்சின் பிரதம கொறடா

06 May, 2026 | 05:20 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நீதித்துறை மீது நிறைவேற்று அதிகாரம் மேற்கொள்ளும் தலையீடுகளைக் கண்டிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில்  பாராளுமன்ற விவாதத்தை கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கு அமைய  எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த  கருணாதிலக, எதிர்க்கட்சியின் பிரதி பிரதம கொறடாவான ஜே.சி அலவத்துவல மற்றும்  அஜித் பி.பெரேரா ஆகியோர் ஒன்றிணைந்து தயாரித்த யோசனை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ழுதனக்டிமை (06)  பாராளுமன்றத்தில் சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகரை சந்தித்து அவரிடம் குறித்த யோசனை பத்திரத்தை கையளித்துள்ளனர்.

அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின்  அரசியலமைப்பின் ஊடாக,  சட்டத்தின் ஆட்சியினதும் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டினதும் அடிப்படையாக நீதித்துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டிற்கு இணங்க, நீதித்துறை அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் நிறைவேற்று அதிகாரம் தலையிடவோ, செல்வாக்கு செலுத்தவோ அல்லது அவ்வாறு செல்வாக்கு செலுத்துவதாகத் தோன்றவோ கூடாது.

2026 மே 1ஆம் திகதி நடைபெற்ற மே தின கூட்டத்தில்,  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  கடந்த  ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் தீர்ப்பு மே 25 ஆம் திகதி வழங்கப்படும் என பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டதோடு, அந்தத் தீர்ப்பைக் 'கொண்டாடுவதற்கு' தயாராகுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின்  கருத்தானது,  நிலுவையில் உள்ள  வழக்கு மற்றும் நீதித்துறைச் செயல்பாட்டின் முடிவு குறித்து முன்னதாகவே அறிந்திருப்பதாகவோ அல்லது எதிர்பார்ப்பு நிலவுவதாகவோ நியாயமாக ஊகிக்க முடிவதுடன், அதன் மூலம் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு அல்லது செல்வாக்கு குறித்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

நீதி வழங்கல் மீதான பொதுமக்களின் நம்பிக்கை என்பது நீதித்துறையின் உண்மையான சுதந்திரத்தில் மாத்திரமன்றி, வெளித் தலையீடுகள் இன்றி அச்சுதந்திரம் பேணப்படுவதாகத் தெரிவதிலும் தங்கியுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும், இடையூறு விளைவிக்கும் அல்லது இடையூறு விளைவிப்பதாகத் தோன்றும் நிறைவேற்று அதிகாரத்தின் உறுப்பினர்களது எந்தவொரு கூற்றையும் நடத்தையையும்  பாராளுமன்றம் ஏகமனதாகக் கண்டிக்க   வேண்டும்.

அரசியலமைப்பு, சட்டத்தின் இறையாண்மை மற்றும் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பாராளுமன்றம் மீண்டும் உறுதிப்படுத்து வேண்டும்.ஏதேனும் செல்வாக்கு அல்லது முறையற்ற செயல் குறித்த உணர்வு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, நிலுவையில் உள்ள நீதித்துறைச் செயல்பாடுகள் தொடர்பில் பகிரங்கக் கூற்றுக்களை வெளியிடும்போது நிறைவேற்று அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட கூற்றுத் தொடர்பாக விளக்கமளிக்குமாறும், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் கௌரவத்தை மதிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி  பாராளுமன்றம் கோரிக்கை விடுக்க வேண்டும்.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் நீதி வழங்கல் செயல்முறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், தனது அரசியலமைப்பு அதிகாரங்களின்படி அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும்  பாராளுமன்றம் எடுக்க  வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07