நீண்ட கால ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய அமைச்சரவை அனுமதி - பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

06 May, 2026 | 03:35 PM
image

(செ.கவிஷனா)

இலங்கை அரசாங்க சேவையில் நீண்டகாலமாக தற்காலிக ஒப்பந்தம் மற்றும் பதிலீட்டு அடிப்படையில் பணியாற்றும் சுமார் 1 லட்சம் பேர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் அபயரத்ன தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (06) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் இத்தகைய அரச பதவிகளில் இணைந்து தற்போது வரை சேவையில் உள்ள 98,800 ஊழியர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர்.

இந்தப் பணி நிரந்தரத்தை பெறுவதற்கு ஊழியர்கள் குறைந்தபட்சம் 180 நாட்கள் பணியாற்றிக்க வேண்டும் என்பதோடு அந்த பதவிக்குரிய கல்வி மற்றும் ஏனைய தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு பொருத்தமான இந்த நிரந்தர நியமனங்கள் அமைவதுடன், முறையான வெற்றிடங்கள் இன்றி தற்காலிகமாக எவரையும் பணியமர்த்த போவதில்லை.

இந்த நடைமுறைகளின் போது பணியாளர்களின் அரசியல் பின்னணி அல்லது அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது எவ்விதத்திலும் கருத்தில் கொள்ளமாட்டாது.

அவர்கள் அனைவரும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையிலேயே இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. கடந்த காலங்களில் அரசியல் தேவைகளுக்காகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சரிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் தன்னிச்சையாகப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் குறித்தும் தற்போது தகவல்கள் திரட்டப்பட்டு வருவதுடன், அவர்களுக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் விரைவில் முன்னெடுக்கப்படும். தற்போதைய அரசாங்கத்துக்கு வேலைவாய்ப்புத் திட்டங்களை அரசியல்மயமாக்க எவ்வித தேவையுமில்லை.

அரசாங்கத்தின் வேலைவாய்ப்புத் திட்டங்களை எதிர்வரும் காலங்களில் முழுமையாக அரசியல் நீக்கம் செய்ய அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது.

கடந்த காலங்களை போல் அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைக் கடிதங்கள் மூலம் வேலை வழங்கும் முறை இனி நிச்சயம் தொடராது.

அத்துடன் எதிர்காலங்களில் அரச சேவையில் மேற்கொள்ளப்படும் அணைத்துப் பணி நியமனங்களும் வெளிப்படையான போட்டிப் பரீட்சைகள் மற்றும் அந்தந்த சேவை விதிகளுக்கு அமைவான நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதி அடிப்படையில் வழங்கப்படும்.

தகுதி மற்றும் திறமைக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அரச சேவை மேலும் வலுப்படுத்தவும், இளைஞர்களுச் சமமான வாய்ப்புகளை வழங்கவும் அரசாங்கம் அர்பணிப்புடன் உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35