( இணையத்தள செய்திப் பிரிவு )
ஒரு வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவிப்பதற்கு முன்னரே ஜனாதிபதி எவ்வாறு அறிய முடியும் எனக் கேள்வி எழுப்பிய கம்மன்பில, இது ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நீதித்துறையின் கௌரவத்தை சீர்குலைக்கும் செயல் எனத் தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில புதன்கிழமை (06) கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற "மக்களின் குரல்" (மஹஜன ஹன்ட) விசேட ஊடக சந்திப்பில், ரங்க நிஷாந்த ராஜபக்ச என்பவரது மரணம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மிக முக்கியமான தகவல்களை வெளியிட்டார்.
இங்கு உரையாற்றிய கம்மன்பில மேலும் கூறுகையில்,
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி உயிரிழந்த அபேசிங்க ஆராச்சிலாகே ரங்க நிஷாந்த ராஜபக்ச என்பவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும், அது சந்தேகத்திற்கிடமான ஒன்று என்பதை தாம் சாட்சியங்களுடன் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நான்கு விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய கம்மன்பில, இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, உயிரிழந்தவரின் மனைவி எவ்வித முறைப்பாடும் செய்யவில்லை என பொலிஸார் கூறுவது தவறானது என்றும், இது தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிப்படுத்த எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சாட்சியங்களுடன் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து நாட்டின் நீதித்துறை சுதந்திரம் குறித்துப் பேசிய அவர், ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடுகள் மற்றும் உரைகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
மே தினக் கூட்டத்தின் போது, ஒரு வழக்கின் தீர்ப்பு மே மாதம் 25 ஆம் திகதி தமக்குச் சாதகமாக வரும் என ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்தமையானது, நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட மறைமுக அழுத்தமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவிப்பதற்கு முன்னரே ஜனாதிபதி எவ்வாறு அறிய முடியும் எனக் கேள்வி எழுப்பிய கம்மன்பில, இது ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நீதித்துறையின் கௌரவத்தை சீர்குலைக்கும் செயல் எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விடுபாட்டுரிமை என்பது அவர் எத்தகைய தவறுகளைச் செய்தாலும் தப்பிப்பதற்கான ஒரு கவசமல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் இந்த நீதிமன்ற அவமதிப்புச் செயல்களுக்காகவும், அதிகார துஷ்பிரயோகத்திற்காகவும் ஜனாதிபதி நிச்சயம் சட்டத்தின் முன் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனத் தனது உரையில் மிகக் காட்டமாக எச்சரித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM