(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெருமளவு வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கு, ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காவிட்டால் த.வெ.க தலைவர் விஜய் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பாணியையே கையில் எடுக்கவிருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வெற்றியையடுத்து, த.வெ.க எந்தக் கட்சிகளின் ஆதரவை பெறும், எவ்வாறு தனிப்பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து பல்வேறு மட்டத்தில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 2 வார கால அவகாசம் தருமாறு கேட்டுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க, டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் பாணியையே விஜய் பின்பற்றப்போகிறார் என பேசப்படுகிறது.
2012இல் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய கெஜ்ரிவால், அடுத்த ஆண்டே (2013) டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியானது டெல்லியில் ஆட்சி அமைத்தது. ஆனால், ஜன லோக்பால் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற முடியாமல் போனதால், கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
ஆட்சி அமைத்து 49 நாட்களிலேயே ஆம் ஆத்மி அரசு கலைந்து, 2015இல் மீண்டும் டெல்லியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
அந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மொத்தம் 70 தொகுதிகள். அதில் 67 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது.
ஆட்சியை கலைத்து, மீண்டும் தேர்தலை சந்தித்து பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்த கெஜ்ரிவாலைப் போன்று த.வெ.க தலைவர் விஜயும் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க தீர்மானித்திருக்கக்கூடும் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
“யாரும் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் நிபந்தனையுடன் ஆதரவு கரம் நீட்ட வந்தால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்” என்றும் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
“தமிழக மக்கள் நம்மை நம்பி இந்த அளவுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். எனவே, தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தாலும், இதை விட அதிக இடங்கள் நமக்கு கிடைக்கும்” என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விஜய், பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்பாரா அல்லது மீண்டும் ஒரு தேர்தலுக்கு தயாராவாரா? என்பது பற்றி தெரியாத நிலையில், பெரும் எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM