சீனாவைச் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்

Published By: Digital Desk 3

06 May, 2026 | 09:32 AM
image

மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர்ப் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று (06) புதன்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கை சென்றடைந்துள்ளார்.

அங்கு அவர் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உடன் இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய சர்வதேசப் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகச் சர்வதேச ஆதரவைத் திரட்டும் நோக்கில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் கடந்த சில வாரங்களாகப் பல்வேறு நாடுகளுக்கு இராஜதந்திரப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். 

ஈரானின் மிக நெருங்கிய நட்பு நாடாகவும், அந்நாட்டின் மசகு எண்ணெய்யை அதிகளவில் வாங்கும் முக்கிய நாடாகவும் சீனா விளங்குவதால், இந்தப் பயணம் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.

இப்பயணத்தைக் கூர்ந்து கவனித்து வரும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ சீனாவுக்கு விடுத்துள்ள கோரிக்கையில்,

 ஈரானின் தற்போதைய நடவடிக்கைகள் அந்நாட்டை உலக அரங்கில் தனிமைப்படுத்தி வருகின்றன என்பதை ஈரான் வெளியுறவு அமைச்சருக்குச் சீனா தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தவுள்ளார்.

இந்த இரு பெரும் தலைவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஈரான் அமைச்சர் சீனாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது மத்திய கிழக்கு அரசியல் நகர்வுகளில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த...

2026-05-12 16:25:06
news-image

தமிழ்நாட்டில் 717 மதுபானசாலைகளை மூடுவதற்கு முதலமைச்சர்...

2026-05-12 15:14:30
news-image

ஈரானுடன் போர் நிறுத்தம் ஆபத்தில் உள்ளது...

2026-05-12 06:38:51
news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11