சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிக்கு சஞ்சு செம்சன், கார்த்திக் ஷர்மா ஆகியோரின் இணைப்பாட்டம் வழிவகுத்தது

06 May, 2026 | 09:27 AM
image

(நெவில் அன்தனி)

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக டெல்ஹி அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (05) இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 8 விக்கெட்களால் மிகவும் இலகுவாக வெற்றியீட்டியது.

சஞ்சு செம்சனின் ஆட்டம் இழக்காத அரைச் சதம், கார்த்திக் ஷர்மாவின் சிறந்த துடுப்பாட்டம் ஆகியனவும் அவர்களிடையே பகிரப்பட்ட சத இணைப்பாட்டமும் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றி அடைய வழிவகுத்தன.

முன்னதாக நூர் அஹ்மத், குர்ஜாப்னீத் சிங், ஜெமி ஓவர்ட்டன் ஆகிய சுழல்பந்துவிச்சாளர்கள் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை கட்டுப்படுத்தியிருந்தனர்.

அப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 156 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 17.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதன் மூலம் தனது 5ஆவது வெற்றியை ஈட்டிய சென்னை சுப்பர் கிங்ஸ் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட் (6), ஊர்வில் பட்டேல் (17) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (45 - 2 விக்.)

இந் நிலையில் சஞ்சு செம்சன், கார்த்திக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸை வெற்றி அடையச் செய்தனர்.

சஞ்சு செம்சன் 52 பந்தகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 87 ஓட்டங்களுடனும் கார்த்திக் ஷர்மா 31 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 41 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதுடன் ஒரு கட்டத்தில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.

எனினும் மத்திய வரிசை வீரர்களான ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (38), சமீர் ரிஸ்வி (40 ஆ.இ.) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

பெத்தும் நிஸ்ஸன்க 19 ஓட்டங்களுடன் மூன்றாவது அதிகபட்ச எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் நூர் அஹ்மத் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: சஞ்சு செம்சன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை மகளிர் ஏ அணியில் மன்னார்...

2026-05-11 21:36:11
news-image

தெற்காசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற...

2026-05-11 19:41:05
news-image

முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றி முதல்...

2026-05-11 10:22:37
news-image

உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அரைச்...

2026-05-11 10:09:02
news-image

மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில்...

2026-05-10 14:12:03
news-image

ஷுப்மான் கில், சாய் சுதர்சன் துடுப்பாட்டத்திலும்...

2026-05-10 12:20:12
news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29