(நெவில் அன்தனி)
லங்கா பிரீமியர் லீக்கின் 6ஆவது அத்தியாயத்திற்கான 'வெளிநாட்டு வீரர்கள் பதிவு' இணையதளம் 2026 மே 8ஆம் திகதி திறக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் (LPL) செவ்வாய்க்கிழமை (05) அறிவித்தது.

இந்த இணையத்தளம் தொடங்கியவுடன் www.srilankacricket.lk என்ற முகவரியை வெளிநாட்டு வீரர்களுக்கு அணுகக் கூடியதாக இருக்கும் எனவும் இந்த இணையத்தளம் மே 18ஆம் திகதிவரை இயங்கும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆறாவது ரி20 லீக் அத்தியாயம் கொழும்பு எஸ் எஸ் சி மைதானம், ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெறவுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் 2026 சுற்றுப் போட்டியை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டி நிகழ்வுக்கான உரிமத்தை வைத்திருக்கும் ஐபிஜி குழுமத்துடன் இணைந்து லங்கா பிறீமியர் லீக் போட்டியை எல் பி எல் உரிமையாளரான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடத்தும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐந்தாவது எல்பிஎல் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸை 9 விக்கெட்களால் வெற்றிகொண்டு ஜெவ்னா கிங்ஸ் சம்பியனாகி இருந்தது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM