போலி முகப்புத்தக கணக்கில் வலம்வரும் ஆசாமியை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்  குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்குள் வருகை தரும் போதோ அல்லது இலங்கையை விட்டு வெளியேற முற்படும் போதோ சந்தேக நபரை கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பெண்களின் பெயர்களில் திறக்கப்பட்ட போலி முகப்புத்தக கணக்குகளில் இருந்து செல்வந்தர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி பின்னர் அவர்களை மிரட்டி பணப்பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.