சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன் தி பாய்'

05 May, 2026 | 06:01 PM
image

புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் 'பாலன் தி பாய்' திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

'மஞ்சும்மல் பொய்ஸ்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பாலன் தி பாய்'. இந்த திரைப்படம் சர்வதேச அளவிலான பார்வையாளர்களை கவர்வதற்காக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'மார்ச் டு ஃபிலிம்' எனும் பிரிவில் எதிர்வரும் 14-ம் திகதி அன்று பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் சிதம்பரம் பேசுகையில், '' பாலின அடையாளம் , உயிர் வாழ்வதற்கான போராட்டம் ,தாய்- சேய் இடையிலான உணர்வு ரீதியிலான பிணைப்பு... ஆகியவற்றை மையமாகக் கொண்டு 'பாலன் -தி பாய்' உருவாக்கப்பட்டிருக்கிறது. நாம் எம்மை பற்றி அறியாமல் சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மற்றும் சேர வேண்டிய இடத்தை நோக்கிய தேடலுடன் கூடிய பயணத்தை விவரிப்பது தான் இந்தப் படைப்பு'' என்றார்.

கே வி என் புரொடக்ஷன்ஸ்- தெஸ்பியன் ஃபிலிம்ஸ்- ஜித்து மாதவன் -சிதம்பரம் - ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'பாலன் - தி பாய் ' சர்வதேச அளவிலான பார்வையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-08-15 15:43:22
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாரீஸ் கஃபே'...

2026-08-15 15:45:02
news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

'ஃபீல் மை லவ்' படத்தின் செகண்ட்...

2026-08-15 09:40:08
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17