தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை

05 May, 2026 | 05:56 PM
image

தைரொய்ட் பாதிப்பு மற்றும் தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தற்போது புதிய வைத்திய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன சிகிச்சை அறிமுகம் ஆகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.‌

பொதுவாக கழுத்துப் பகுதியில் அதிலும் குறிப்பாக முன்கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் உங்களுடைய தைரொய்ட் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என அவதானிக்கலாம். 

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மற்றும் எஃப் என் சி பரிசோதனையை மேற்கொண்டால்... அவை ஹைபோதைரொய்டிசமா? அல்லது தைரொய்ட் புற்று நோயா? என்பதை துல்லியமாக அவதானிக்கலாம்.

அவை தைரொய்ட் புற்று நோயாக இருந்தால் சத்திர சிகிச்சைகளை குறிப்பாக ஹெமி தைராரொய்ட்டக்டோமி, டோட்டல் தைரொய்ட்டக்டோமி , டோட்டல் தைரொய்ட்டக்டோமி வித் லிம்ப்நோட் டிஸ்ஸக்சன் ஆகிய நவீன சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு புற்றுநோய் கட்டிகளை அகற்றி விடுவர்.

சத்திர சிகிச்சைக்குப் பிறகு அவர்களுக்கு ரேடியோ ஓக்டிவ் அயோடின் தெரபி எனும் நவீன அணுவியல் வைத்திய சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

இத்தகைய சிகிச்சை தற்போது மருந்தியல் சிகிச்சை வடிவிலும் கிடைப்பதால் நோயாளிகளுக்கு விரைவில் முழுமையான நிவாரணம் கிடைக்கிறது. இந்த நவீன சிகிச்சையை மேற்கொள்வதால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையை தவிர்க்கும் வகையிலான வாய்ப்பு நோயாளிகளுக்கு கிடைக்கிறது.

வைத்தியர் அவினாஷ் தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும்...

2026-05-11 16:55:02
news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07
news-image

அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-04-24 17:37:23