தமிழக வெற்றி கழகத்தின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தெரிவு

Published By: Digital Desk 3

05 May, 2026 | 04:49 PM
image

சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த 17 வது தமிழக சட்டப்பேரவை தேர்தலில் புதிதாக களம் இறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் யாரும் எதிர்பாராத அளவிற்கு பெருவாரியான வாக்குகளை பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை இல்லாவிட்டாலும்.. சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது.

பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்ற நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள்- விடுதலை சிறுத்தைகள்- காங்கிரஸ் கட்சி- ஆகியவை தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (05) செவ்வாய்க்கிழமை சென்னையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமையகத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வராக விஜயை தெரிவு செய்வதற்கு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதற்கான உறுதிமொழி பத்திரத்திலும் வெற்றி பெற்ற 106 உறுப்பினர்களும் கைசாத்திட்டுள்ளனர். விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றி கழகத்தின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் தமிழ்நாட்டின் முதல்வராகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த...

2026-05-12 16:25:06
news-image

தமிழ்நாட்டில் 717 மதுபானசாலைகளை மூடுவதற்கு முதலமைச்சர்...

2026-05-12 15:14:30
news-image

ஈரானுடன் போர் நிறுத்தம் ஆபத்தில் உள்ளது...

2026-05-12 06:38:51
news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11