நடுவழியில் நிற்கும் சொகுசுக் கப்பல்:  02 பேருக்கு ஹண்டா வைரஸ் உறுதி

Published By: Digital Desk 3

05 May, 2026 | 04:40 PM
image

அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்து வந்து ஆபிரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கேப் வெர்டே தீவுக்கு அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில், ஆபத்தான 'ஹண்டாவைரஸ்' தொற்று இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த டச்சுப் பெண்மணி மற்றும் தென் ஆபிரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 69 வயது பிரித்தானிய பிரஜை ஆகிய இருவருக்குமே இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கப்பலில் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களையும், உயிரிழந்த ஜேர்மனி பிரஜையின் நெருங்கிய உறவினர் ஒருவரையும் விமானம் மூலம் உடனடியாக ஐரோப்பாவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொற்றுநோய் தடுப்பு பணிப்பாளர்  வைத்தியர் மரியா வான் கெர்கோவ்,

பாதிக்கப்பட்ட இரு ஊழியர்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிப்பதே எங்களது தற்போதைய முக்கிய நோக்கமாகும். கப்பலில் உள்ள எலிகள் மூலமாகவோ அல்லது அவர்கள் பயணத்தை ஆரம்பித்த  அர்ஜென்டினாவின் உசுவாயா நகரில் உள்ள தீவுகளில் இருந்தோ இத்தொற்று பரவியிருக்கலாம். தம்பதியர் போன்ற மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு இடையே இந்த வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை இந்தக் கப்பல் கேப் வெர்டே தீவில் தரையிறங்க வேண்டியிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காகப் பயணிகள் எவரையும் தரையிறங்க அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது. இதனால் கப்பலில் உள்ள 23 நாடுகளைச் சேர்ந்த 149 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கப்பலை ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள கேனரி தீவுகளுக்கு கொண்டு செல்வது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அங்கு கப்பல் கொண்டு செல்லப்பட்ட பின்னர், பயணிகளுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களைப் பாதுகாப்பாகத் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய  நோயாளியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், தற்போது சீராக உள்ளதாகத் தென் ஆபிரிக்க சுகாதாரத் துறை அமைச்சர் வைத்தியர் ஆரோன் மோட்சோலெடி தெரிவித்துள்ளார். 

இந்த வைரஸுக்குத் தனித்துவமான மருந்துகள் இல்லாததால், அவருக்குச் செயற்கை சுவாசம் உள்ளிட்ட ஆதரவு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கப்பலில் மேலும் யாருக்கும் நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும், மாற்று ஏற்பாடுகள் விரைவில் செய்யப்பட வேண்டும் எனப் பயணிகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தங்களின் கவலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த...

2026-05-12 16:25:06
news-image

தமிழ்நாட்டில் 717 மதுபானசாலைகளை மூடுவதற்கு முதலமைச்சர்...

2026-05-12 15:14:30
news-image

ஈரானுடன் போர் நிறுத்தம் ஆபத்தில் உள்ளது...

2026-05-12 06:38:51
news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11