சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை செல்லப்பாவின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு

05 May, 2026 | 10:03 AM
image

தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த முன்னணிக் கலைஞரான மாமனிதர் தேனிசை செல்லப்பாவின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (03 ) மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. 

இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் கனத்த இதயங்களுடன் கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. 

அகவணக்கத்தினைத் தொடர்ந்து மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் சூரியத்தேவனின் வேருகளே மலர்வணக்கப்பாடலைத் தொடர்ந்து கலைஞர்களால் கரோக்கே முறையில் மாமனிதர் தேனிசை செல்லப்பாவின் குரலில் வெளிவந்த எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டன.

அரங்கம் நிறைந்து நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்ட இவ்வணக்க நிகழ்வில் மாமனிதர் தேனிசை செல்லப்பா பற்றிய நினைவுப்பகிர்வுகளை கலைஞர்கள், போராளிகள், இன உணர்வாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியாக பாடல் இசைக்கப்பட்டு, தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

இந்த நிகழ்வை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர்...

2026-09-15 16:50:10
news-image

கொட்டகலையில் விநாயகர் சிலைகள் கையளிப்பு

2026-09-15 10:54:59
news-image

மனையாவெளி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஸ்ரீ வல்லபசக்தி...

2026-09-15 10:39:48
news-image

யோகக்கலை கற்கைநெறி நல்லூரில் ஆரம்பம்

2026-09-15 11:59:51
news-image

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு...

2026-09-15 06:02:11
news-image

வவுனியா நகரில் இலக்கிய சந்திப்பு-2

2026-09-14 18:49:38
news-image

கொழும்பில் ‘EOLLLIM 2026’ கொரிய கலாசார...

2026-09-14 13:51:56
news-image

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா:...

2026-09-13 17:20:18
news-image

கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி...

2026-09-13 11:50:42
news-image

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா...

2026-09-13 10:50:11
news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31