‘நவமணி மாலை’ இசைவட்டை வெளியிடவுள்ள சிங்கப்பூர் கலாமஞ்சரி நிறுவனம்  

04 May, 2026 | 07:21 PM
image

ஒன்பது பாடல்களை கொண்ட ‘நவமணி மாலை’ எனும் தமிழ் இசைவட்டை சிங்கப்பூரின் கலாமஞ்சரி நிறுவனமானது ஒளிவட்டு இணையத்தில் மே 13ஆம் திகதி வெளியிடவிருக்கிறது. 

இந்த பாடல்களை சென்னையைச் சார்ந்த ருக்மணி சிவக்குமார் எழுதி, இசையமைத்திருக்கிறார். 

கலாமஞ்சரியின் நிறுவனரும் உள்ளூர் பாடகியுமான சௌந்தரநாயகி வயிரவன் ஒன்பது பாடல்களையும் பாடியிருக்கிறார். இந்த ஒளிவட்டு அவருடைய ஏழாவது வெளியீடாகும்.

ஜி. சிவகுமார் மற்றும் மாணிக்கவாசகம் மிருதங்கம் வாசித்துள்ளனர். வே. சிவக்குமார் வயலின் இசைத்துள்ளார்.

விஷுவல் பீட்ஸ் பிரைவேட் லிமிடட் (Visual Beatz Pte Ltd) இதை ஒலிப்பதிவு  செய்துள்ளனர். 

நட்சத்திரம் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

“முக்கண்ணன் மகனே” என விநாயகரைப் போற்றும் பாடல், “நமசிவாய” என்ற சிவன் பாடல்,  “ஆதிபராசக்தி” (மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி) என்கிற மூன்று தேவியர் மீதான பாடல், சரவணப் பொய்கையின் முருகன் பாடல், அறுபடை வீடுகளின் பெருமை, பஞ்ச சபையின் அற்புதத்தை விளக்கும் நடராஜர் பாடல், ரவிக்குல சோமா என்ற ராமர் பாடல், காளிங்கன் நர்த்தனம் ஆடிய கண்ணன் பாடல், நவகிரகங்களின் மகிமையை விளக்கும் நரசிம்மர் பாடல் என பல இந்து கடவுள்கள் குறித்து இந்த ஒளிவட்டு வெளிவருகிறது.  

இப்பாடல் காட்சிகள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27