திருகோணமலை, மஹதிவுல்வெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இன்று  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர் மஹதிவுல்வெவவைச் சேர்ந்த 46 வயதுடைய  கே.பீ.காமினி  என்பவராவார்.

குறித்த நபர் இன்று சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு  சொந்தமான விடுதி ஒன்றிற்கு விறகு வெட்டவதற்காக  காட்டிற்கு சென்ற வேளை மரமொன்றில் குளவிக் கூடு இருந்ததை அவதானிக்காமல் வீழ்ந்து கிடந்த அம்மரத்தை வெட்டிய போது குளவிக்கூடு களைந்து தாக்கியதாக வைத்தியசாலை ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்