வெண்சந்தனக் குற்றிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு சகோதரர்களை பதுளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, சிறு துண்டுகளாக்கப்பட்ட வெண்சந்தனக் குற்றிகள் 50 கிலோவினை பதுளை பொலிசார், ரிதீபான என்ற இடத்தில் வைத்து கைப்பற்றினர்.

அத்துடன் அச்சந்தனக் குற்றிகளை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்ற சகோதரர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.