தமிழக சட்டமன்ற தேர்தல்: காலை 9 மணி வரையான நிலைவரம் - விஜய் முன்னிலையில்....

Published By: Digital Desk 3

04 May, 2026 | 09:33 AM
image

(இணையத்தள தமிழக செய்தியாளர்)

தமிழக தேர்தல் முடிவுகளில் முன்னணி நிலவரம் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான 118 என்ற எண்ணிக்கையை எந்தகூட்டணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணி அளவில் தொடங்கியது. முதலில் அஞ்சலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியிலிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியில் திமுக - காங்கிரஸ் - தேமுதிக - விடுதலை சிறுத்தைகள் - இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - மதிமுக-  கொங்கு மக்கள் தேசிய கட்சி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி - முக்குலத்தோர் புலிப் படை -  எஸ்டிபிஐ கட்சி -  தமிழர் தேசம் கட்சி - ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதில் மதிமுக - கொங்கு மக்கள் தேசிய கட்சி -மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை - எஸ் டி பி ஐ- தமிழர் தேசம் -  ஆகிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தலில் புதிதாக களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூடும் என்ற இந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு கடந்த தேர்தலை விட கூடுதலாக பதிவாகி இருக்கும் 12 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதே இதற்கான காரணம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்த தொகுதிகள்-  234 

முன்னிலை அறிவிக்கப்பட்ட தொகுதிகள்- 113

திமுக 38 

அதிமுக 40 

த.வெ.க 35

தொகுதி முன்னிலை நிலவரம் மட்டும்தான்

கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 886 வாக்குகளில் பின்னடைவை எதிர் கொண்டிருக்கிறார்

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் த வெ க தலைவர் விஜய் முன்னிலை

சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு

சென்னை பெரம்பூர் தொகுதி 

த.வெ.க - 6538

திமுக - 3,504

தொகுதிகள் முன்னிலை நிலவரம் 174

த.வெ.க 71

அதிமுக 61

திமுக 42

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த...

2026-05-12 16:25:06
news-image

தமிழ்நாட்டில் 717 மதுபானசாலைகளை மூடுவதற்கு முதலமைச்சர்...

2026-05-12 15:14:30
news-image

ஈரானுடன் போர் நிறுத்தம் ஆபத்தில் உள்ளது...

2026-05-12 06:38:51
news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11