தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - 2026

04 May, 2026 | 05:55 PM
image

குன்னூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எம். ராஜு 8,009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பவானிசாகர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வி பி தமிழ்செல்வி- 4,569 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

சென்னை அண்ணாநகர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வி கே ராம்குமார் 21,363 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வி பி துரை 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் 5,396 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஈரோடு மேற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆனந்த் மோகன் 22,815 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளரான திருமதி பிரேமலதா விஜயகாந்த் 68 ,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.

திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் 650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 23 வது சுற்றின் முடிவில் 5,531 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் நீடிக்கிறார்

காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் 28,367 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பெற்றிருக்கிறார்.

திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஊத்தங்கரை தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இளையராஜா 5,364 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மதுரை சோழவந்தான் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எம் வி கருப்பையா 2,678 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

குடியாத்தம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிந்து 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லட்சுமணன் 4,168 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அணைக்கட்டு தொகுதியில் அதிமுக சார்பு போட்டியிட்ட வேட்பாளர் வேலழகன் சுமார் 6,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயக்குமார் 10,023 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

திருவிடை மருதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கோவி. செழியன் 64,140 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் 17,779 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி 16,217 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

பரமக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கதிரவன் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மதுரை கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகேயன் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நிலக்கோட்டை தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அய்யனார் 3, 000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அருள் விக்னேஷ் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சென்னை திரு வி க நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பல்லவி 22, 333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா 16,479 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சென்னை பெரம்பூர் தொகுதியை தொடர்ந்து திருச்சி கிழக்கிலும் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் 72,762 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். இதன் மூலம் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக 101 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் ,ஏனைய கட்சிகள் நான்கு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்காள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 198 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 89 இடங்களிலும், மற்ற கட்சிகள் ஆறு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் முதன்முதலாக பாரதிய ஜனதா கட்சி மேற்கு வங்காளத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகிறது.

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 35 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி மூன்று தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என் ஆர் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஆறு தொகுதிகளிலும், மற்றவை நான்கு தொகுதிகளிலும், தமிழக வெற்றிக்கழகம் மூன்று தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

திருவாடானை தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜு 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

திருமயம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரகுபதி 1,490 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அப்துல் வஹாப் 18, 805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் மெய்யநாதன் 12,905 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சென்னை எழும்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜ்மோகன் 10,804 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்.. ஒரு கோடியே 40 லட்சம் வாக்குகளை தமிழக வெற்றிக்கழகம் பெற்றிருக்கிறது. 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தமிழக வெற்றி கழகம் பெற்றிருக்கிறது.

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ எஸ் மணியன் 7,331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதன் 11,009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான மாரிமுத்து- சுமார் 12 ஆம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆஸ்டின் 6,139 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆற்காடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எஸ்.எம். சுகுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ராணிப்பேட்டை தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தாஹிரா 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் போட்டியிட்ட  அமைச்சர் ஆர். காந்தி தோல்வியை தழுவினார்.

நாமக்கல் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திலீப் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் 42,215 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் அவர் 92 260 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் அவர் 92 260 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

கிருஷ்ணகிரி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முகுந்தன் 18, 867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சீர்காழியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவின் வேட்பாளரான செந்தில் செல்வன் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இளங்கோ 18,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கோவில்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கருணாநிதி 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பூம்புகார் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நிவேதா எம். முருகன் 6,988 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

அந்தியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஹரி பாஸ்கர் 1, 646 வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரவீன் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வி எஸ் பாபு 8,192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட முதல்வர் மு க ஸ்டாலின் தோல்வியை தழுவினார்.

அறந்தாங்கி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட முகமது பர்வாஸ் 10, 602 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் 16 வது சுற்று முடிவில் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் முன்னிலை வகிக்கிறார்.

பெரம்பூர் தொகுதியில் 16-வது சுற்று முடிவில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரான விஜய் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

செய்யாறு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் 21,081 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

துறைமுகம் தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சேகர் பாபு 10,417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 12 தொகுதிகளிலும் , திமுக 4 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதி யிலும் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாதவரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஜய் பிரபு -ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 926 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுதர்சனத்தை விட 67,983 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

மதியம் மூன்று மணி நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 110 தொகுதிகளிலும், திமுக 66 தொகுதிகளிலும் , அதிமுக 58 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழக சட்டமன்றத் தேர்தல் : 69 தொகுதிகளில் 55இல் த.வெ.க வெற்றி

தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் உள்ள 69 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 55 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தல் : த.வெ.க வெற்றி

கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

தமிழக சட்டமன்றத் தேர்தல் : த.வெ.க தொடர்ந்து முன்னிலை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 13வது சுற்றின் முடிவில் திருச்சி கிழக்கு தொகுதியில் 20,058 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - 2026


பகல் 12.10 மணி வரையிலான நிலவரம் 

மொத்த தொகுதிகள்-  234 

முன்னிலை அறிவிக்கப்பட்ட தொகுதிகள்- 232

த.வெ.க 109

அதிமுக 69

திமுக 56 

நாதக 00

------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் : கொளத்தூர் தொகுதியில் 6ஆவது சுற்றிலும் ஸ்டாலின் பின்னடைவு ; தவெக முன்னிலை! 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 6வது சுற்றிலும் பின்னடைவை சந்தித்துள்ளதோடு, அதே தொகுதியில் த.வெ.க. கட்சி சார்பில் போட்டியிட்ட பாபு முன்னிலையில் உள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு முடிவுகள் வெளியாகி வருகிறது. 

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் 17,975 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்திக்க, த.வெ.க கட்சி சார்பில் போட்டியிட்ட பாபு 19,804 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - 2026

காலை 11.30 மணி வரையிலான நிலவரம் 

மொத்த தொகுதிகள்-  234 

முன்னிலை அறிவிக்கப்பட்ட தொகுதிகள்- 234

த.வெ.க 109

அதிமுக 75

திமுக 50 

நாதக 00

------------------------------------------------------------------------------------------------

தமிழக சட்டமன்ற தேர்தல்: மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் விஜய் முன்னிலை !

தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவிற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகம் 103 தொகுதிகளிலும் , அதிமுக 74 தொகுதிகளிலும், திமுக 56 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான திருமதி வானதி சீனிவாசன் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் த.வெ.க முன்னிலை பெற்றுள்ளது.

திமுக மற்றும் அதிமுக தொடர் பின்னடைவு.

சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் நான்காவது சுற்றின் முடிவில் உதயநிதி ஸ்டாலின் 30 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான திருமதி வானதி சீனிவாசன் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ. க வேட்பாளர் விஜய் 5,687 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

உதகை மற்றும் தளி ஆகிய இரண்டு தொகுதிகளில் பாஜக தற்போது முன்னிலை பெற்றுள்ளது.

சென்னை பெரம்பூர் தொகுதியில் நான்காவது சுற்று நிறைவடைந்த பிறகு த வெ க தலைவர் விஜய் 9,128 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 103 தொகுதிகளிலும் , அதிமுக 75 தொகுதிகளிலும், திமுக 55 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் 5 சுற்றுகள் எண்ணிக்கை முடிவடைந்த பிறகும் முதல்வர் மு க ஸ்டாலின் தொடர் பின்னடைவு.

சென்னை கொளத்தூர் தொகுதியில் த வெ.க வேட்பாளர் வி எஸ் பாபு 2,529 வாக்குகள் முன்னிலை

திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ. க வேட்பாளர் விஜய் 5,687 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

உதகை மற்றும் தளி ஆகிய இரண்டு தொகுதிகளில் பாஜக தற்போது முன்னிலை பெற்றுள்ளது.

சென்னை பெரம்பூர் தொகுதியில் நான்காவது சுற்று நிறைவடைந்த பிறகு த வெ க தலைவர் விஜய் 9,128 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------------

தமிழக சட்டமன்ற தேர்தல்: கேரளாவில் 140 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம்

 

கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சி 85 தொகுதிகளிலும் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 50 தொகுதிகளிலும் பாஜக நான்கு தொகுதிகளிலும் ஏனைய கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. 

மேற்கு வங்காள மாநிலத்தில் 267 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாரதிய ஜனதா கட்சி 159 தொகுதிகளிலும் திரிணால் காங்கிரஸ் கட்சி 104 தொகுதிகளிலும் ஏனைய கட்சிகள் நான்கு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

அசாம் மாநிலத்தில் 125 தொகுதிகளுக்கான முன்னிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக 97 தொகுதிகளிலும், காங்கிரஸ் 26 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------------

தமிழக சட்டமன்ற தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் முன்னிலை நிலவரம் வெளியாகி இருக்கிறது 

த.வெக 100

அதிமுக 80

திமுக 53

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்னணி நிலவரம் வெளியான நிலையில் தமிழக வெற்றி கழகம் அதிக தொகுதிகளை பெற்றிருப்பதால் அக்கட்சியின் தலைவரான விஜய் வீட்டிற்கு பொலிஸ்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை காவலர்களும், அதன் மூத்த அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.

தற்போது வெளியாகி இருக்கும் முன்னணி நிலவரங்கள் காரணமாக, தமிழகத்தில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை பெறாததால் கூட்டணி ஆட்சிக்கு தான் வாய்ப்புள்ளது.

234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரத்தின் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சதம் அடித்துள்ளது 100 தொகுதியில கட்சி முன்னிலையில் உள்ளது. 

அதிமுக 80 தொகுதிகளிலும், திமுக  53 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.

முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட 21 அமைச்சர்கள் பின்னடைவு. 10 அமைச்சர்கள் முன்னிலை

அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சரான எல். முருகன் பின்னடைவு.

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழக சட்டமன்ற தேர்தல்: 230 தொகுதிகளின் முன்னணி நிலவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

த.வெ.க- 103

அதிமுக 73

திமுக 48

விருத்தாச்சலம் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவரான பிரேமலதா விஜயகாந்த் இரண்டாவது சுற்று நிறைவில் பின்னடைவு

போடிநாயக்கனூர் தொகுதியில் இரண்டாவது சுற்று நிறைவடைந்த நிலையில் திமுக வேட்பாளரான முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 54 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------

தமிழக சட்டமன்ற தேர்தல்:  221 தொகுதிகளில் விஜய் முன்னிலையில்....

221 தொகுதிகளின் முன்னணி நிலவரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் த. வெ க 95 

அதிமுக 73 

திமுக 53

கொளத்தூர் தொகுதியில் நிறைவடைந்த இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு முதலமைச்சர். மு க ஸ்டாலின் பின்னடைவு

----------------------------------------------------------------------------------------

தமிழக சட்டமன்ற தேர்தல்: காலை 9 மணி வரையான நிலைவரம் - விஜய் முன்னிலையில்....

தொகுதிகள் முன்னிலை நிலவரம் 174

த.வெ.க 71

அதிமுக 61

திமுக 42

முழுமையான செய்தியை பார்வையிட https://www.virakesari.lk/article/245294

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்:  வாக்கு எண்ணிக்கை பணி தொடக்கம்

 

 

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு- மேற்கு வங்காளம்- கேரளா -புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும்.. ஏப்ரல் ஒன்பதாம் திகதி - ஏப்ரல் 23ஆம் திகதி - ஏப்ரல் 29 ஆம் திகதி என மூன்று கட்டங்களாக பொது தேர்தல் நடைபெற்றது.

 

முழுமையான செய்தியை பார்வையிட https://www.virakesari.lk/article/245290

-------------------------------------------------------------------------------------------------

தமிழகத்தில் நட்சத்திர தொகுதிகளின் நிலவரம்...

17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியில் திமுக- காங்கிரஸ்- தேமுதிக- விடுதலை சிறுத்தைகள்- இந்திய கம்யூனிஸ்ட் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - மதிமுக-  கொங்கு மக்கள் தேசிய கட்சி- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை-  எஸ்டிபிஐ கட்சி-  தமிழர் தேசம் கட்சி -ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதில் மதிமுக -கொங்கு மக்கள் தேசிய கட்சி -மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை - எஸ் டி பி ஐ- தமிழர் தேசம் -  ஆகிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

முகஸ்டாலின் -  சென்னை கொளத்தூர்

உதயநிதி ஸ்டாலின் - சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி

எடப்பாடி கே பழனிச்சாமி - சேலம் எடப்பாடி

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் - சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு

சீமான் - காரைக்குடி

முழுமையான செய்தியை பார்வையிட  https://www.virakesari.lk/article/245289

------------------------------------------------------------------------------------------------------

தமிழக தேர்தல் முடிவுகள்:  திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி - தமிழக வெற்றி கழகம் - யார் அறுதி பெரும்பான்மை பெறுவர்?

தமிழக தேர்தல் முடிவுகளில் முன்னணி நிலவரம் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான 118 என்ற எண்ணிக்கையை எந்த கூட்டணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது. 

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தலில் புதிதாக களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூடும் என்ற இந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு கடந்த தேர்தலை விட கூடுதலாக பதிவாகி இருக்கும் 12 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதே இதற்கான காரணம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முழுமையான செய்தியை பார்வையிட https://www.virakesari.lk/article/245287

 

----------------------------------------------------------------------------------------------------------------

தமிழக சட்டமன்ற தேர்தல்: அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் எண்ணிக்கை ...

 

17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியில் திமுக- காங்கிரஸ்- தேமுதிக- விடுதலை சிறுத்தைகள்- இந்திய கம்யூனிஸ்ட் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - மதிமுக-  கொங்கு மக்கள் தேசிய கட்சி- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை-  எஸ்டிபிஐ கட்சி-  தமிழர் தேசம் கட்சி -ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதில் மதிமுக -கொங்கு மக்கள் தேசிய கட்சி -மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை - எஸ் டி பி ஐ- தமிழர் தேசம் -  ஆகிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. 

 

முழுமையான செய்தியை பார்வையிட  https://www.virakesari.lk/article/245284

---------------------------------------------------------------------------------------------

தமிழக சட்டமன்ற தேர்தல்: வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணி அளவில் தொடங்கியது. முதலில் அஞ்சலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியிலிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான செய்தியை பார்வையிட https://www.virakesari.lk/article/245282

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பானில் நிலநடுக்கம்

2026-05-20 13:41:28
news-image

ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராக ஜோன் ஸ்வினி...

2026-05-20 12:14:57
news-image

மேற்காசியா நெருக்கடியால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி...

2026-05-20 12:02:45
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா...

2026-05-20 06:26:19
news-image

கொங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்...

2026-05-19 12:52:50
news-image

துருக்கியில் துப்பாக்கி ஏந்திய நபர் வெறித்தனம்:...

2026-05-19 11:45:22
news-image

அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு ;...

2026-05-19 10:00:22
news-image

ஈரான் எண்ணெய் தடைகளை தற்காலிகமாக நீக்க...

2026-05-19 04:54:41
news-image

உலக சாதனை முறியடிப்பு: 32ஆவது முறையாக...

2026-05-18 13:15:03
news-image

அமெரிக்காவில் வான் சாகசத்தின்போது 2 போர்...

2026-05-18 11:05:27
news-image

ஐக்கிய அரபு அமீரக அணுமின் நிலையம்...

2026-05-18 06:37:41
news-image

சீனாவுக்கு செல்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் 

2026-05-17 13:13:24